முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு

புதன்கிழமை, 8 ஜனவரி 2025      சினிமா
Nayanthara

Source: provided

சென்னை : நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நெட்பிளிக்சில் வெளியான நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப் படத்தில், நடிகர் தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, அதை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் தனுஷ் சார்பில் வொண்டர் பார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து