முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றங்களின் தலைநகராக டெல்லி: பா. ஜ.க. மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      இந்தியா
Kejriwal 2024-02-17

Source: provided

புதுடெல்லி: பா. ஜ.க. டெல்லியை குற்றங்களின் தலைநகராக  மாற்றிவிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால்  குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த பேரணியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி டெல்லியை குற்றங்களின் தலைநகராக மாற்றிவிட்டது. டெல்லியில் கொள்ளைகள், செயின் பறிப்பு, கும்பல் சண்டைகள் அதிகரித்துவிட்டன. பா.ஜ.க. டெல்லி மக்களை வெறுக்கிறது. அந்த வெறுப்பினால் தான் அவர்களால் கடந்த 25 ஆண்டுகளாக மீண்டும் ஆட்சிக்கு வர முடியுவில்லை.

ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், குடியிறுப்பு நலச்சங்கங்கள்  டெல்லி அரசிடமிருந்து நிதி பெற்று தங்களின் பகுதிகளில் தனியார் காவலர்களை நியமிப்பார்கள். போலீஸுக்கு மாற்றை உருவாக்குவது நமது நோக்கம் இல்லை. பா.ஜ.க. தற்போது தர்ணா கட்சியாக மாறிவிட்டது. பா.ஜ.க. ரோகிங்கியாக்கள் பெயரில் டெல்லியின் பூர்வ வாக்களர்களை பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து புகார் அளிக்க நேற்று முன்தினம் நான் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றிருந்தேன்.” என்றார்.

இதனிடையே, கெஜ்ரிவாலின் பூர்வ வாக்களர்கள் குறித்த கருத்தைக் கண்டித்து பா.ஜ.க. தொண்டர்கள் டெல்லியின்  பேரோஸ் ஷா சாலையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், டெல்லியில் பதற்றம் அதிகமானது. நிலைமையை சமாளிக்க போலீஸார் போராட்டம் நடத்தியவர்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடித்து அவர்களை விரட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து