முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டி: அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டம்

வியாழக்கிழமை, 9 ஜனவரி 2025      இந்தியா      அரசியல்
Kejrival 2024-01-05

புதுடில்லி, புதுடில்லியில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் 2-வது தொகுதியில் போட்டியிடப்போவதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறிய கருத்துக்கு, புது டில்லியில் மட்டுமே போட்டியிடப் போவதாகத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுவதால், சட்டப்பேரவைத் தேர்தல் இன்டியா கூட்டணி விவகாரம் அல்ல என்று கெஜ்ரிவால் வலியுறுத்தினார். 

2013 முதல் புதுடில்லியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த கெஜ்ரிவால், இந்த முறை டில்லியின் இரண்டு முன்னாள் முதல்வர்களின் மகன்களுக்கு எதிராக தீவிர மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மாவை பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்திய நிலையில், மூன்று முறை டில்லி முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்துக்கு காங்கிரஸ் கட்சி சீட்டு வழங்கியுள்ளது.

புது டில்லியில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் இரண்டாவது தொகுதியில் போட்டியிடப் போவதாக பா.ஜ.க. கருத்து தெரிவித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் நான் ஒரு இடத்தில் அதாவது புது டில்லியில் மட்டுமே போட்டியிடுகிறேன் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார். ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி ஆதரவாளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதற்காக, புது டில்லி உள்பட பல்வேறு தொகுதிகளிலிருந்து மொத்தமாக பா.ஜ.க. விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இன்று (நேற்று) மாலை தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அதில் வாக்காளர்களின் பெயர் நீக்கம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் கூறினார். சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்ததற்காக சமாஜவாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் நன்றி தெரிவித்தார். பா.ஜ.க.வுக்கு எதிரான இன்டியா கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ், டில்லி தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது மற்றும் இதுவரை 48 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டப்பேரவைக்குப் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து