முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயிலாடுதுறையில் துணிகரம்: சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 பவுன் தங்க நகை கொள்ளை

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
theft 2025-01-10

Source: provided

சீர்காழி: சீர்காழியில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 125 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மங்கைமடம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை செய்கிறார். கடந்த திங்கட்கிழமை தனது மகளின் பிரசவத்திற்காக மயிலாடுதுறைக்கு சென்ற செல்வேந்திரன் நேற்று அதிகாலை வீடு திரும்பினார். வீடு திரும்பிய செல்வேந்திரனிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய வீட்டின் பின்பக்க கதவானது உடைந்த நிலையில் இருந்தது. உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு அனைத்து பொருட்களும் ஆங்காங்கே சிதரிக்கிடந்தன.  மேலும், பீரோவில் வைத்திருந்த 125 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருவெண்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து