முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, பாலியல் வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 7 தனி சிறப்பு கோர்ட்டுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த முன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். குறிப்பாக, பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி, பிணையில் கூட அவர்கள் வெளிவர முடியாத அளவுக்கு சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல, குறிப்பிட்ட சில குற்றங்களில் பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால் 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆனால் ஆயுள் காலம் வரை தண்டனை நீட்டிக்கப்படலாம் என்றும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் மசோதா என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில் சட்டசபையின் கடைசி நாளான நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும். டிஜிட்டல் முறையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோவை, சேலம், திருச்சி, சென்னை சுற்றுப்புற பகுதியில் 7 தனி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். அதைப்போல, மாவட்டம் தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகளுக்கு முன் விடுதலை கிடைக்காத வகையில், தமிழ்நாடு சிறைத்துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்" என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து