முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் என்னை அப்பா என அழைப்பது அளவில்லா மகிழ்ச்சி: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2024-12-03

சென்னை, தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை அப்பா, அப்பா என வாய்நிறைய அழைக்கும்போது அளிவில்லை மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6 -ம் தேதி தொடங்கி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறுதி நாளான நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தில் இதுவரைக்கும் 22 இலட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற, பல இலட்சம் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரையும் ஒவ்வொரு துறையில், இந்தத் திட்டம் முதல்வனாக ஆக்கி வருகிறது. இதுதான் விடியல் ஆட்சி.  அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர், கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர் கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான், புதுமைப் பெண் திட்டம். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரிக்கு வருவது 30 விழுக்காடு அதிகமாகியிருக்கிறது.

இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 இலட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தியிருக்கிறோம். அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் படித்தவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறோம்.  தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார்,என் குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்குப் போய் படிக்க முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. பணம் இல்லை, அதனால் வேண்டாம் என்று என் அம்மா சொல்லிவிட்டார். 

புதுமைப் பெண் திட்டத்தைக் கேள்விப்பட்டு, என் கல்லூரிச் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும், என் அம்மா சம்மதம் தெரிவித்தார். ஆனால், நாள்தோறும் பேருந்தில் போக வேண்டுமே என்று அவர் சொன்னார். அதற்குத்தான் விடியல் பயணம் இருக்கிறதே என்று நான் சொன்னேன். ஆக, இரண்டு திட்டங்களையும் பயன்படுத்தி நான் தற்போது படித்துக்கொண்டு வருகிறேன்” என்று அந்த மாணவி சொன்ன சொற்கள்தான், விடியலுக்கான சாட்சி. அதனால்தான், தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை ‘அப்பா, அப்பா’ என்று வாய்நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால், இந்தப் பாச உணர்வுதான் முக்கியம். என்று உருக்கமாக அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து