முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: தேர்தலில் வெற்றிப்பெற்ற ப்ரெட்ரிக் மெர்ஸ் அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2025      உலகம்
Germany 2025-02-24

Source: provided

ஜெர்மன் : ஜெர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலப் ஸ்கோல்ஸ் படுதோல்வியைத் தழுவியுள்ளார். ப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள் மீது கடும் நடவடிக்கை என்று அவர் கொடுத்த வாக்குறுதி பெறும் பங்குவகித்ததாக தெரிகிறது.

ப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சியில் அவரது கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சோஷியல் யூனியன் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் இணைந்து பெரும்பான்மை வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளன. வெற்றிக்குப் பின்னர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மெர்ஸ், ஜெர்மனியில் இனி மீண்டும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆட்சி நடைபெறும் என்றார்.

சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவது தொடர்பாக அவரது வலுவான நிலைப்பாடு மற்றும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது போன்ற அவரது வாக்குறுதிகள் அவருக்கு வெற்றியை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்குவகித்துள்ளன. மெர்ஸின் பெரிய சவால், கூட்டணி ஆட்சியை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக ஆட்சியை அமைப்பது என்பதாகவே உள்ளது. 

மெர்ஸ் வெற்றியை வரவேற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில், “அமெரிக்காவைப் போலவே ஜெர்மனி மக்களும் முட்டாள்தனமான கொள்கைகளைப் புறம்தள்ளியுள்ளனர். எரிசக்தி மற்றும் குடியேற்ற விவகாரத்தில் ஜெர்மனி மக்கள் சரியான முடிவை எடுத்து தேர்தலில் வாக்களித்துள்ளனர். ஜெர்மனிக்கு இது மிகப்பெரிய நாள். என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து