முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2025      தமிழகம்
vijay 2025-01-17

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழாவின்போது செய்தியாளரை விஜய்யின் பவுன்சர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தவெக தலைவர் விஜய்யின் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களுக்கும் பவுன்சர்களுக்கு இடையே விழா நடைபெறும் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின்போது செய்தியாளர்களை பவுன்சர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், ஒரு செய்தியாளரை நெஞ்சில் தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

விழா அரங்கில் இருந்து நெஞ்சை பிடித்தவாறு வெளியேறிய செய்தியாளரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சக செய்தியாளர்கள் அனுப்பிவைத்தனர். இந்நிலையில், செய்தியாளர் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழா அரங்கில் இருந்து வெளியேறி ஆம்புலன்ஸில் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் பவுன்சர்களின் செயலுக்கு சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து