முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­று : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

புதன்கிழமை, 5 மார்ச் 2025      தமிழகம்
CM-2 2024-11-02

Source: provided

சென்னை : இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­றா­னது. மொழி­யின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தாய்­மொழி ஆட்சி மொழி­யாக உள்­ளது. அவை­யும் இந்த தேசத்­தின் மொழி­கள்­தான். அவற்­றை­யும் தேசிய மொழி­கள் என்ற அடிப்­ப­டை­யில் இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்சி மொழி­க­ளா­க, அ­லு­வல் மொழி­க­ளா­க­ ஆக்­கிட வேண்­டும் என்­பதை திமுக நெடுங்­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கி­றது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள 8-வது கடிதத்தின் விவரம்: “இந்தி நம் நாட்­டின் தேசிய மொழி என்­றும், அதனை யாரும் புறக்­க­ணிக்கக் கூடாது என்­றும் பாஜகவின­ரும், அவர்­க­ளின் கொள்கை வழி அமைப்­பி­ன­ரும் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யின் தலை­வர் ஓம் பிர்லா, சமஸ்­கி­ரு­தம்­தான் பார­தத்­தின் மூல­மொழி என்று அவை­யி­லேயே குறிப்­பி­டு­கி­றார். இவை இரண்­டுமே தவ­றான பரப்­பு­ரை­யா­கும்.

இந்­திய ஒன்­றி­யத்­தின் அலு­வல் மொழி­தான் இந்தி. அத்­து­டன் ஆங்­கி­ல­மும் இணை அலு­வல் மொழி­யாக இருக்­கி­றது. இந்­தி­தான் தேசிய மொழி என்பது முற்­றி­லும் தவ­றா­னது. இந்­திய ஒன்­றி­யம் என்­பதே பல்­வேறு மொழி­வ­ழித் தேசிய இனங்­க­ளைக் கொண்­ட­தா­கும். இதனை இந்­திய விடு­த­லைக்கு முன்பே காந்­தி­ய­டி­கள் நன்கு உணர்ந்­தி­ருந்­தார். அத­னால்­தான் மாகாண காங்­கி­ரஸ் கமிட்­டி­களை அந்­தந்த மாநி­லத் தாய்­மொ­ழி­க­ளின் பெய­ரில் அமைத்­தார்.

மொழி­யின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தாய்­மொழி ஆட்சி மொழி­யாக உள்­ளது. அவை­யும் இந்த தேசத்­தின் மொழி­கள்­தான். அவற்­றை­யும் தேசிய மொழி­கள் என்ற அடிப்­ப­டை­யில் இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்சி மொழி­க­ளா­க, அ­லு­வல் மொழி­க­ளா­க­ ஆக்­கிட வேண்­டும் என்­பதை திமுக நெடுங்­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கி­றது.

1965-ம் ஆண்டு நாடா­ளு­­மன்றத்தின் மாநி­லங்­க­ள­வை­யில் உரை­யாற்­றிய முன்னாள் முதல்வர் அண்ணா, “இந்­தி­யா­வில் 100க்கு 40 பேர் இந்தி பேசு­வ­தா­கக்­கூறி, அத­னால் அதைத்­தான் ஆட்­சி­ மொ­ழி­யாக்க வேண்­டும் என்­கி­றார்­கள். 40 சத­வி­கி­தம் பேர் என்­பதை வாதத்­திற்­காக ஏற்­றுக்­கொண்­டா­லும், இந்தி ஒரு பகு­தி­யில் உள்ள மக்­க­ளால் பேசப்­ப­டு­கி­ற­தே­யன்றி, இந்­தியா முழு­வ­தும் பர­வ­லா­கப் பேசப்­ப­ட­வில்லை.

ஒரு பகு­தி­யில் பெரும்­பான்­மை­யி­ன­ரால் பேசப்­ப­டு­வது, நாடு முழு­வ­தும் ஆட்சி மொழி­யா­வ­தற்­கா­னத் தகு­தி­யைப் பெற்­று­ வி­டாது. மொழிப்­பி­ரச்­சி­னை­யில் திமுக.வின் ­கொள்கை என்­ன­வென்­றால், இந்­தி­யா­வில் முக்­கிய மொழி­க­ளாக உள்ள 14 மொழி­க­ளும் தேசிய மொழி­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, ஆட்­சி­ மொ­ழி­க­ளா­கும் தகுதி தரப்­ப­ட ­வேண்­டும்” என்று வாதா­டி­னார்.

திமுக.வின் நோக்­கம் இந்­தியை எதிர்ப்­ப­தல்ல, தமிழ் உள்­ளிட்ட இந்­திய மொழி­க­ளுக்கு சம­மான அங்­கீ­கா­ரம் வேண்­டும். இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்­சி­ மொ­ழி­க­ளா­க, அ­லு­வல் மொழி­க­ளாக அனைத்து மொழி­க­ளுக்­கும் இட­ம­ளிக்க வேண்­டும்” என்று குறிப்­பிட்­டார்­கள்

தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென முதல் குரல் கொடுத்த தமி­ழர் பரி­தி­மாற்­க­லை­ஞர் என்­றால், தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென்று முத­லில் சொன்ன வெளி­நாட்­ட­வர் அறி­ஞர் ராபர்ட் கால்­டு­வெல் ஆவார். 

தமிழ் மீது பிர­த­மர் மோடி மிகுந்த மதிப்பு வைத்­தி­ருக்­கி­றார் என்­றும், மாநில மொழி­க­ளின் வளர்ச்­சிக்­கா­கத்­தான் மும்­மொ­ழிப் பாடத்­திட்­டத்தை வலி­யு­றுத்­து­கிறோம் என்­றும் சொல்­கின்ற பாஜக.வினர் தங்­கள் ஆட்­சி­யில் தமி­ழுக்கு எவ்­வ­ளவு நிதி ஒதுக்­கி­யி­ருக்­கி­றார்­கள்? சமஸ்­கி­ரு­தத்­திற்கு எவ்­வ­ளவு நிதி ஒதுக்கி­யி­ருக்­கி­றார்­கள்? என்ற வேறு­பாடே, அவர்­கள் தமிழ்ப் பகை­வர்­கள் என்­பதை வெளிச்­ச­மிட்­டுக் காட்­டி­வி­டும்.

தமிழ்­நாட்­டுக்­கு­ரிய நிதி­யைத் தரா­மல் வஞ்­சிப்­பது போலவே தமி­ழுக்­குரிய நிதி­யை­யும் ஒதுக்­கா­மல் ஒன்­றிய பாஜக அரசு தொடர்ந்து வஞ்­சித்து வரு­கி­றது. தமி­ழைப் போலவே இந்­தி­யா­வின் பிற மாநில மொழி­க­ளை­யும் ஆதிக்க மொழி­க­ளைக் கொண்டு அழிக்­கத் துடிக்­கி­றது. மொழித் திணிப்பு ஒரு நாட்­டில் எத்­த­கைய விளை­வு­களை உண்­டாக்­கும் என்­பதை உலக சரித்­தி­ரத்­தைப் புரட்­டி­னால் புரிந்­து ­கொள்­ள­லாம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து