முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏப். 2 முதல் வரி விதிப்பு அமல் : அமெரிக்க அதிபர் அறிவிப்பு

புதன்கிழமை, 5 மார்ச் 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன் : இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதிக்க இருக்கும் பரஸ்பர வரி விகிதம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க கூட்டு காங்கிரஸில் அறிவித்தார்.

அமெரிக்கா அதிபராக இரண்டவாது முறையாக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க கூட்டு காங்கிரஸில் நேற்று முன்தினம் ஆற்றிய தனது முதல் உரையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா அதிக வரிகளை எதிர்கொள்கிறது என்று தெரிவித்தார். 

மேலும் அமெரிக்காவின் வெளிநாட்டு உறவுக் கொள்கைகளை மாற்றியமைத்த, முக்கிய கூட்டாளிகளுடனான வர்த்தக மோதல் மற்றும் கணிசமான அளவில் மத்திய அரசு ஊழியர்களை குறைத்தது போன்ற அவரது துணிச்சலான நடவடிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இவை அனைத்தும் அவர் பதவியேற்று ஆறு வாரங்களுக்குள் நடந்துள்ளன. அப்போது அவர் பேசியதாவது:-

ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா  நீங்கள் வசூலிப்பதை விட அதிகமான வரிகளை நமக்கு எதிராக விதிக்கின்றன. அது மிகவும் அநீதியானது.

இந்தியா நம்மிடமிருந்து 100 சதவீதத்துக்கும் அதிகமாக வாகன கட்டணங்களை வசூலிக்கிறது. அமெரிக்க பொருள்களுக்கு சீனா விதிக்கும் கட்டணங்கள் நாம் அவர்களின் பொருள்களுக்கு விதிக்கும் கட்டணங்களை விட இரண்டு மடங்கு அதிகம். தென்கொரியா விதிக்கும் கட்டணம் நான்கு மடங்கு அதிகம்.ஏப்ரல் 2-ம் தேதி முதல் இந்த நாடுகளுக்கு எதிரான பரஸ்பர கட்டணங்கள் அமலுக்கு வருகின்றன. ஏப்ரல் 1-ம் தேதியில் என நான் ஏன் அறிவிக்கவில்லை என்றால், அது முட்டாள்கள் தினத்துடன் ஒத்துப்போவதை விரும்பவில்லை. ஏப்.2-ம் தேதியில் இருந்து அவர்கள் என்ன கட்டணங்கள் நமக்கு விதித்தாலும் நாமும் அவர்களுக்கு ஒரு பரஸ்பர கட்டணத்தை விதிப்போம். அது அவர்கள் கட்டணங்களுடன் முன்னும் பின்னும் இருக்கும்.

அவர்கள் நம்மை அவர்களின் சந்தைகளில் இருந்து விலக்கி வைக்க பணமற்ற கட்டணங்களை செயல்படுத்தினால், நமது சந்தைகளில் இருந்து அவர்களை தள்ளி வைக்க பணமற்ற தடைகளை நாமும் உருவாக்குவோம் என்று தெரிவித்தார். ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு அறிவிப்புக்கு அவையில் இருந்த அவரது ஆதரவாளர்கள் எழுந்து நின்று கைத்தட்டினர். அமெரிக்கா தனது அண்டை நாடானா மெக்சிகோ மற்றும் கனடா பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பினை அமல்படுத்தியதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து