முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பரவும் காட்டு தீ

புதன்கிழமை, 5 மார்ச் 2025      உலகம்
Japan 2025-03-05

Source: provided

ஜப்பான் : ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், கடந்த 8 நாள்களாக பற்றியெரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 

கடந்த மாதம் 26-ம் தேதி சுமார் 40,000 மக்கள் வசிக்கும் நகரமான ஒஃபுனாடோவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2,100 ஹெக்டேருக்கும் மேற்பட்ட வன நிலப்பரப்புகளில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ள தீயணைப்பு மற்றும் பேரிடர் நிர்வாக அமைப்பு, பாதிப்படைந்த நிலப்பரப்பின் அளவு இன்னும் தெளிவாக தெரியவில்லை. 1992 இல் ஏற்பட்ட காட்டுத்தீக்கு 1,030 ஹெக்டர் பரப்பளவிலான நிலம் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத்தீ இது என்று தெரிவித்துள்ளது. மேலும் தீயினால் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக கூறியுள்ளது.

கடந்த கடந்த 26-ம் தேதி வடகிழக்கு கடற்கரையில் உள்ள ஒபுனாடோ நகரில் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகும் தீ தொடர்ந்து பரவி வருகிறது. இதற்கு தற்போது வழக்கத்திற்கு மாறாக நிகழ்ந்து வரும் வறண்ட குளிர் மற்றும் பலத்த காற்றுதான் காரணம் என்று வானிலை அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 27-ம் தேதி நகரத்தில் உள்ள ஒரு சாலையில் உடல் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஒருவரின் மரணத்திற்கு தீ விபத்து காரணமாக இருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தீயினால் 80-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதுமிருந்து ஏறக்குறைய 2,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை கட்டுக்குள் கொண்டு வரப்படாத காட்டுத்தீ, மேலும் இரண்டு இடங்களில் பரவியுள்ளதாகவும், ஆபினாட்டோ நகரை நெருங்கியுள்ள நிலையில் 4,400-க்கும் மேற்பட்டோரை வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  பிரதமர் ஷிகெரு இஷிபா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து