முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ரயில் கூட்ட நெரிசலில் பலி சம்பவம்: மண்டல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம்

புதன்கிழமை, 5 மார்ச் 2025      இந்தியா
Waiting-list 2023-11-17

Source: provided

டெல்லி : ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. கோடிக்கணக்கான மக்கள் இதில் புனித நீராடினர். கடந்த மாதம் டெல்லி ரெயில் நிலையத்தின் நடைமேடை 13, 14, 15-ல் நின்றிருந்த உத்தர பிரதேச மாநிலம் செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் கூடியது. இதனால் கும்பமேளாவுக்கு செல்ல குவிந்த பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் டெல்லி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் பலியான விவகாரத்தில் ரெயில்வே மண்டல மேலாளர், கூடுதல் மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கோட்ட ரெயில்வே மேலாளர் சுக்விந்தர் சிங், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் விக்ரம் சிங் ராணா மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையர் மகேஷ் சந்த் சைனி, ரெயில் நிலைய இயக்குநர் மகேஷ் யாதவ், முதுநிலை பிரிவு வணிக மேலாளர் ஆனந்த் மோகன் ஆகியோரை இடமாற்றம் செய்து ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து