எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
வேறுபாடுகளை கடந்து....
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம்: ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சினைக்காக அழைத்திருக்கிறோம் என்று மனதில் வைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கக் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உரிமைப் போராட்டம்...
தமிழ்நாடு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத்தான், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக, இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வார்கள்.
சாதித்திருக்கிறோம்....
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது. பல பத்தாண்டுகளாக, வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்திருக்கிறோம். தற்போது இருக்கின்ற 543 பாராளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தால், மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள். 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள்.
12 கூடுதல் தொகுதிகளை...
பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால், பத்து தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை; நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை.
குரல் கொடுக்க வேண்டும்...
நம்முடைய தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக்கிறேன். அனைத்துக் கட்சிகளும், கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைந்துவிடும். எனவே, இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும்.
தண்டனையாகதான்...
மக்கள்தொகை அடிப்படையில், மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, “மக்கள்தொகை கட்டுப்பாடு” எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
தென்னிந்தியாவுக்கே....
தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சிக் கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக திடமாக அப்போதே நாம் வலியுறுத்தியிருக்கிறோம். இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல்! இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நினைக்கிறேன்; இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன். இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
அநீதியாக மாறும்...
இது, இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல். இப்படியொரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப்படும். தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்திற்கு இருக்கும் பலம் குறைக்கப்படும். 39 எம்.பி.க்கள் இருக்கும்போது எழுப்பும் குரலையே, ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை எல்லோரும் நினைத்துப் பார்க்கவேண்டும். எனவே நம்முடைய நிலைப்பாட்டை, அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாகவேண்டும். வர இருக்கும், இல்லை என்றால், எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் “மக்கள்தொகை கணக்கெடுப்பு” அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பை, நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
தீர்மானங்கள் விவரம்:
இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான “பாராளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.
நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே பாராளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.
மேலும், பாராளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக - பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. இக்கோரிக்கைகளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது.
இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் - மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் - தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது" என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-03-2025.
05 Mar 2025 -
மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
05 Mar 2025மணிப்பூர் : மணிப்பூரில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Mar 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 10-ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தென்மாநில எம்.பி.க்களின் கூட்டு நடவடிக்கைக்குழு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
05 Mar 2025சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட த
-
போபர்ஸ் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியது சி.பி.ஐ.
05 Mar 2025புதுடெல்லி : 1986-ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இந்திய ராணுவத்திற்கு சுவீடனின் போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கப்பட்டன.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
05 Mar 2025சென்னை : சென்னையில் சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் ஆபரணட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள்
05 Mar 2025சென்னை : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (5.3.2025) தலைமைச் செயலகத்தில், பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக நடைபெற்ற அனைத
-
ரோகித்தின் கிரிக்கெட் பயணம் குறித்து கவுதம் காம்பீர் பதில்
05 Mar 2025துபாய் : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் குறித்து காம்பீர் பதிலளித்துள்ளார்.
எதிர்காலம் என்ன?
-
கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவக்கம்: சாம்பல் புதனை முன்னிட்டு தேவாலயங்களில் திருப்பலி
05 Mar 2025சென்னை : கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் (மாா்ச் 5) தொடங்கியது.
-
இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு : முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
05 Mar 2025சென்னை : இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது.
-
பாலக்கோடு அருகே விபத்தில் 3 பேர் பலி
05 Mar 2025தருமபுரி : தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
உளவுத் தகவல்களை உக்ரைனுடன் பகிர பிரிட்டனுக்கு அமெரிக்கா தடை
05 Mar 2025அமெரிக்கா : அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது.
-
30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது: தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு : அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
05 Mar 2025சென்னை : 30 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறை கூடாது என்றும் தென்மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என்றும் மக்களவை தொகுதி மறுவரையறை உள்
-
வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
05 Mar 2025சென்னை : வேளாண் நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் கருத்துகள் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவுக்கு நினைவு திரும்பியது
05 Mar 2025சென்னை : பிரபல சினிமா பின்னணி இசை பாடகி கல்பனா (வயது 44). பல சினிமா பாடல்களை பாடியுள்ள இவர், சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வந்தார்.
-
நெடுஞ்சாலை மதுக்கடைகளை வரும் 13-ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
05 Mar 2025புதுடெல்லி : உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை வருகிற 13-ம் தேதிக்குள் அகற்ற முதல்வர் யோகி ஆதித்யாந
-
திருப்பூரில் போலீஸ் எனக்கூறி நகை வியாபாரியிடம் ரூ.1.10 கோடி கொள்ளை
05 Mar 2025திருப்பூர் : திருப்பூரில் நகை வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.1.10 கோடி கொள்ளையடித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சாதனைகளைவிட அணியின் வெற்றியே முக்கியம்: கோலி
05 Mar 2025துபாய் : சாதனைகளைவிட அணியின் வெற்றிதான் முக்கியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
5-வது முறையாக....
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய தலைவர்களின் முக்கிய கருத்துக்கள்
05 Mar 2025சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
-
கொலையாளிகளை விட பெரிய அச்சுறுத்தல்கள்: ஊழல்வாதிகள் குறித்து சுப்ரீம கோர்ட் வேதனை
05 Mar 2025சென்னை : அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர்
-
அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்: தேர்தல் ஆணையர்
05 Mar 2025புதுடெல்லி : அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வலியுறுத்தி
-
இந்தியாவில் மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும்: அமெரிக்கா
05 Mar 2025அமெரிக்கா : மாட்டிறைச்சி உற்பத்தி, ஏற்றுமதியை நடப்பாண்டில் இந்தியா அதிகரிக்கும் என அமெரிக்க அரசின் விவசாயத்துறை தெரிவித்துள்ளது.
-
தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
05 Mar 2025சென்னை : கோடைகாலம் தொடங்கி இருக்கும் நிலையில் மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்
-
3 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதும் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது
05 Mar 2025சென்னை : தமிழகத்தில் 3 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதும் பிளஸ்-1 பொதுத் தேர்வு தொடங்கியது.
-
பா.ஜ.க. செய்தது வரலாற்று பிழை: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
05 Mar 2025சென்னை : அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காமல் தவிர்த்தது வரலாற்றுப் பிழை என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.