முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலையாளிகளை விட பெரிய அச்சுறுத்தல்கள்: ஊழல்வாதிகள் குறித்து சுப்ரீம கோர்ட் வேதனை

புதன்கிழமை, 5 மார்ச் 2025      தமிழகம்
Supreme-Court 2024-11-269

Source: provided

சென்னை : அரசு துறைகள் மற்றும் அரசியல் கட்சிகளில் உயர் மட்டங்களில் உள்ள ஊழல்வாதிகள், கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகளை விட சமூகத்திற்கு மிப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பொது வாழ்வில் ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

வளரும் நாட்டில் ஒரு சமூகம் கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளிகள் முதல் சட்டம்ஒழுங்கு வரையிலான அச்சுறுத்தலை விட பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது என்றால், அது அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலும் அரசியல் கட்சிகளிலும் உள்ள ஊழல்வாதிகளிடம் இருந்து தான் வருகிறது," என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. கிராம பஞ்சாயத்துகள் மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளை தணிக்கை செய்ய லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் அரசின் தணிக்கை ஆய்வாளர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இத்தகைய காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மேலும் கூறும் போது, நமது சமூகத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திய ஒரே ஒரு காரணியைக் குறிப்பிடச் சொன்னால், அது மறுக்க முடியாத ஊழல். ஊழலின் அளவு குறித்து மக்கள் மத்தியில் இருந்த கருத்துக்களில் ஒரு பகுதியே உண்மையாக இருந்தாலும், உயர் பதவியில் உள்ளவர்கள் தண்டனையின்றி செய்யும் பரவலான ஊழல்தான் இந்த நாட்டில் பொருளாதார அதிருப்திக்கு வழிவகுத்தது என்ற பார்வை உண்மையிலிருந்து தொலைவில் இருக்காது, என்று தெரிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து