எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழ்நாடு காவல்துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேச அனுமதித்தீர்கள்...
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி, விதிமுறைகளின்படி அனுமதி கேட்காவிட்டாலும், நீங்கள் அவரைப் பேச அனுமதி தந்தீர்கள். நீங்கள்கூட அனுமதி தருவதற்கு யோசித்தீர்கள். ஆனால், நான் உங்களிடம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அவரைப் பேச அனுமதித்தீர்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் முறையாகப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால், நான் பதிலளிக்கும்போது, வேறு ஏதாவது விஷயங்களை நான் எடுத்துச் சொல்லிவிடுவேன் என்று பயந்துகொண்டு, இன்றைக்கு அவர்கள் (எதிர்க்கட்சியினர்) வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இருந்தாலும், நான் அவர்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கொலை சம்பவம்....
நேற்று (நேற்று முன்தினம்) நான்கு கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கே தெரிவித்தார்கள். கோவை சம்பவத்தைப் பொறுத்தவரையில், முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சம்பவத்தைப் பொறுத்தவரையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கையில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில், குடும்பத் தகராறு எனத் தெரியவந்துள்ளது. ஈரோட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து நான் இப்போது விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்:- சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஜான் (எ) சாணக்கியன் என்பவர் ஐகோர்ட் நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று (நேற்று முன்தினம்) கையொப்பமிட்டுவிட்டு, தன்னுடைய மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருக்கிறார்கள். காயமடைந்த சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
பாதுகாப்பிற்காக...
அவரது மனைவி, சித்தோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, இதில் தொடர்புடைய கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரவணன், சதீஷ், பூபாலன் மற்றும் மைனா கார்த்திக் ஆகியோரை பச்சப்பாளி என்ற இடத்தில் அவர்களது காரை மறித்து கைது செய்ய முயற்சி செய்தபோது, சதீஷ் உள்ளிட்டோர் காவல் துறையினரை கொடிய ஆயுதங்களால் தாக்கினர். இதனால் சித்தோடு காவல் ஆய்வாளர் பாதுகாப்பிற்காக அவங்களை நோக்கிச் சுட்டிருக்கிறார். இதில் சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
விசாரணை மேற்கொண்டு....
கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி செல்லதுரை கடந்த 2020 ஆம் ஆண்டு சேலம் மாநகரில் கொலை செய்யப்பட்ட வழக்கில், சாணக்கியன் இரண்டாவது எதிரி என்பதால், அதற்குப் பழிவாங்குகிற நோக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து இங்கு சில கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கிலே சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இவை குறித்த புள்ளிவிவரங்களோடு இந்த அவைக்கு சிலவற்றை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
பாரபட்சமும் இல்லை...
காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவிதமான பாரபட்சமும் இதில் காட்டப்படுவதில்லை. குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் ஒருபுறம்; குற்றச் சம்பவங்கள் நிகழாமல் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மறுபுறம் என இரு வகையிலும் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் கூலிப்படையினர் எனக் கருதப்படுவோரின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான இனங்களில் குண்டர் சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குண்டர் சட்டத்தில் கைது...
கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 572 சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, 2023-ம் ஆண்டு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49 ஆயிரத்து 280 ஆக இருந்தது; 2024 ஆம் ஆண்டில் அது 31 ஆயிரத்து 498 ஆகக் குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 782 குற்றங்களைக் குறைத்திருக்கிறோம். சில கொலைக் குற்றங்கள் நடைபெறும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும்போது அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.
முந்தைய ஆட்சியில்...
உண்மையில் எண்ணிக்கையின் அளவில் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டில் கொலைக் குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்திருக்கின்றன. அதாவது, முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 109 கொலைகள் குறைந்திருக்கின்றன. அதேபோல், பழிக்குப் பழி வாங்கும் கொலைகளின் எண்ணிக்கையும் 2024-ம் ஆண்டில் 42.72 விழுக்காடு குறைந்துள்ளது. இறுதியாக ஒரேயொரு புள்ளிவிவரத்தை மட்டும் தங்கள் வாயிலாக இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2012 முதல் 2024-ம் ஆண்டுவரை நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அதாவது, 2012-ம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மிக அதிகமான எண்ணிக்கை. 2013-ம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,927. கொரோனா காலத்திலும், லாக்-டவுன் இருந்தபோதும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2020-ம் ஆண்டில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,661.
கொலைகள் குறைந்துள்ளன...
கடந்த ஆண்டுகளின் வரலாறு இவ்வாறு இருக்க, தற்போது நமது ஆட்சிக் காலத்தில் காவல் துறை மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில்தான் மிக, மிகக் குறைவான எண்ணிக்கையில், அதாவது, 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன; இதுதான் உண்மை. இதை நடுநிலையாளர்களும், பொது மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். குற்றங்களைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பொது அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டிட தமிழ்நாடு காவல் துறை எனது தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்விரோதம் காரணமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்து, இந்த அரசின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் அடைய நினைப்போர் சென்ற ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி சீரழிந்து கிடந்தது என்பதை நான் இங்கே தெரிவித்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2025.
28 Mar 2025 -
எழும்பூர் ரெயில் நிலையத்தில் தீ விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்
28 Mar 2025சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
-
கோடை விடுமுறை: மும்பை - குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
28 Mar 2025சென்னை, கோடை விடுமுறையை முன்னிட்டு மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.
-
தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார் என்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி
28 Mar 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பயங்கர நிலநடுக்கம்: மியான்மருக்கு உதவ இந்தியா தயார் - பிரதமர் மோடி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை புதிய உச்சம்
28 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் : ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு
28 Mar 2025சென்னை : சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம் செய்ய சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
-
த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்
28 Mar 2025சென்னை, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை உள்பட த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை, சபாநாயகர் திட்டமிட்டு எங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
புதின் குறித்து ஜெலன்ஸ்கி சர்ச்சை பேச்சு
28 Mar 2025கீவ் : புதின் பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையா? - பார்லி.யில் மத்திய அமைச்சர் விளக்கம்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார்: கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு
28 Mar 2025புதுடெல்லி : அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
28 Mar 2025சென்னை : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடை கண்டித்து ஜக்தீப் வெளிநடப்பு
28 Mar 2025புதுடில்லி : ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கண்டித்து ஜக்தீப் தன்கர் வெளிநடப்பு செய்தார்.
-
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு : ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
28 Mar 2025சென்னை : சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்
28 Mar 2025ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
-
பழைய உறவு முடிந்து விட்டது: அமெரிக்க பொருட்களுக்கு மேலும் வரி விதித்த கனடா
28 Mar 2025ஒட்டாவா : பழைய உறவு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் அமெரிக்க பொருட்களுக்கு வரும் 2-ம் தேதி முதல் மேலும் வரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன: த.வெ.க. கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சு
28 Mar 2025சென்னை : காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
-
ஆஸ்திரேலியாவில் மே 3-ம் தேதி தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவால்
28 Mar 2025சிட்னி : ஆஸ்திரேலியாவில் வருகிற மே 3-ம் தேதி பொதுத்தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவாலாக உள்ளது.
-
ஜம்மு-காஷ்மீர் 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை : 3 போலீசார் வீர மரணம்
28 Mar 2025ஸ்ரீநகர் : காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் 3 போலீசார் வீர மரணம் அடைந்துள்ளனர்.
-
சிலி அதிபர் இந்தியா வருகிறார்
28 Mar 2025புதுடெல்லி : சிலி அதிபர் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
-
கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கு தள்ளிவைப்பு
28 Mar 2025சென்னை, கோவில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரிய வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் ரூ.17 உயர்வு
28 Mar 2025சென்னை, தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
-
கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லைக்குள் வந்தடைந்தது
28 Mar 2025திருவள்ளூர், சென்னை குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம்- கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தடைந்தது.