முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 30-ம் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை தொடக்கம்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      தமிழகம்
Air

Source: provided

மதுரை: மதுரை-விஜயவாடா இடையே வருகிற 30-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு, ஐதராபாத், சென்னை வழியாக விமானங்களை இயக்கி வரும் தனியார் விமான நிறுவனம், மேற்கண்ட இடங்களில் இறங்கி பின்னர் வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும்.

தற்பொழுது வரும் 30-ந் தேதி முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வழியாக அதே விமானத்தில் இறங்காமல் பெங்களூருவில் 30 நிமிடம் காத்திருந்த பின்னர் விஜயவாடாவிற்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அந்த தனியார் விமான சேவை வழங்க இருக்கிறது. அதன்படி மதுரையிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கு அரை மணி நேரத்திற்கு பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும். மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கு அரை மணி நேரம் (30 நிமிடம்) கழித்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 12 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 12 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து