எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நெல்லை, ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமை ஆணயைம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை டவுன் ஜாமியா தைக்கா தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே இடப்பிரச்சினை நிலவி வந்தது. கடந்த 18-ந்தேதி காலை பள்ளிவாசல் தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக், அவருடைய சகோதரர் கார்த்திக், முகமது தவுபிக் மனைவி நூர் நிஷா மற்றும் நூர்நிஷா சகோதரர் அக்பர்ஷா உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
இதில் கார்த்திக் மற்றும் அக்பர்ஷா ஆகிய இருவரும் நெல்லை கோர்ட்டில் சரண் அடைந்தனர். முகமது தவுபிக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மேலும் கார்த்திக், அக்பர்ஷா ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக பிளஸ்-1 மாணவன் மற்றும் நூர் நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர் முகமது ஆகியோரையும் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் முகமது தவுபிக் மனைவி நூர்நிஷா, போலீசார் தன்னை தேடுவதை அறிந்து, வெளியூருக்கு தப்பிச் சென்று விட்டார். அவர் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஏற்கனவே கொலையாளிகளை பிடிக்க நியமிக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் கேரளாவுக்கு சென்று முகாமிட்டுள்ளனர். நூர் நிஷா பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே ஜாகீர் உசேன் வீட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியானதால், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த கொலையில் இன்னும் பலர் மீது சந்தேகம் இருக்கிறது. போலீசார் அவர்களையும் விசாரிக்க வேண்டும் என ஜாகீர் உசேன் மகள் மோசீனா திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜாகீர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கி உள்ளது. இதன்படி அடுத்த 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல்துறை இயக்குனர் மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 4 weeks ago |
-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் தீ விபத்து: தெற்கு ரயில்வே விளக்கம்
28 Mar 2025சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
-
த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள்
28 Mar 2025சென்னை, இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, தொகுதி மறுவரையறை தேவையில்லை உள்பட த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
-
தாட்கோ புதிய தலைவர் நியமனம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் எந்த திணிப்பையும் முதல்வர் அனுமதிக்க மாட்டார் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
28 Mar 2025சென்னை : இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்த திணிப்பையும் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார்.
-
பயங்கர நிலநடுக்கம்: மியான்மருக்கு உதவ இந்தியா தயார் - பிரதமர் மோடி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : இந்தியா அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது - மத்திய அமைச்சர்
28 Mar 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் மதவெறி மனநிலையை இந்தியாவால் மாற்ற முடியாது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.
-
டோனி மின்னல் வேக ஸ்டம்பிங்
28 Mar 2025ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு பொதுச்செயலாளர் கடும் எச்சரிக்கை
28 Mar 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் பலி
28 Mar 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலில் ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் உள்பட 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தகவல்
28 Mar 2025புதுடெல்லி : 25 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று நிதின் கட்காரி கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார்: த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசம்
28 Mar 2025சென்னை : தமிழ்நாட்டிடம் விளையாடாதீர்கள் பிரதமர் சார் என்று த.வெ.க. முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் ஆவேசமாக பேசியுள்ளார்.
-
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் : ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவு
28 Mar 2025சென்னை : சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருநாள் இடைநீக்கம் செய்ய சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
-
பழைய உறவு முடிந்து விட்டது: அமெரிக்க பொருட்களுக்கு மேலும் வரி விதித்த கனடா
28 Mar 2025ஒட்டாவா : பழைய உறவு முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் அமெரிக்க பொருட்களுக்கு வரும் 2-ம் தேதி முதல் மேலும் வரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு: 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைவர்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர்.
-
சிவகங்கையில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டிய தேவையில்லை : சட்டசபையில் அமைச்சர் ரகுபதி தகவல்
28 Mar 2025சென்னை : சட்டக்கல்லூரி அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் மே 3-ம் தேதி தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவால்
28 Mar 2025சிட்னி : ஆஸ்திரேலியாவில் வருகிற மே 3-ம் தேதி பொதுத்தேர்தல் ஆளும் கட்சிக்கு கடும் சவாலாக உள்ளது.
-
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக புகார்: கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு
28 Mar 2025புதுடெல்லி : அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரத்தில் கெஜ்ரிவால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
உண்மைக்கு புறம்பாக பொய் செய்திகளை பரப்பி வருகிறார் : இ.பி.எஸ். மீது அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : உண்மைக்கு புறம்பாகவும், தமிழக மக்களின் நலனுக்கு எதிராகவும் பல்வேறு பொய் செய்திகளை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாக ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
28 Mar 2025சென்னை : மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை, சபாநாயகர் திட்டமிட்டு எங்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை புதிய உச்சம்
28 Mar 2025சென்னை : தங்கம் விலை நேற்று (மார்ச் 28) புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
கோடை விடுமுறை: மும்பை - குமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்
28 Mar 2025சென்னை, கோடை விடுமுறையை முன்னிட்டு மும்பை- கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றது.
-
நெதர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்; 5 பேர் படுகாயம்
28 Mar 2025ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
-
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு : ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
28 Mar 2025சென்னை : சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வீராணம் ஏரியில் படகு இல்லமா..? - சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
28 Mar 2025சென்னை : வீராணம் ஏரியில் படகு இல்லம் அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திரன் கூறினார்.
-
ஏ.ஐ. மாடல்களை பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு தடையா? - பார்லி.யில் மத்திய அமைச்சர் விளக்கம்
28 Mar 2025புதுடெல்லி : மத்திய அரசு ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு மாடல்களை பயன்படுத்த எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.