தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தந்தையானார் கே.எல்.ராகுல்

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கே.எல். ராகுல் தனது நீண்ட நாள் காதலியான இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டியை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த நிலையில் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இருவருக்கும் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

__________________________________________________________________________

காலிறுதியில் இகா ஸ்வியாடெக் 

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்  , உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 7(7)-6(5), 6-3  என்ற கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார் .

__________________________________________________________________________

நியூசிலாந்து அணி தகுதி

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2026-ம் ஆண்டு) நடைபெற உள்ளது. இதில் ஓசியானா கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது ரவுண்டின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-நியூ கலிடோனியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதுடன் உலகக்கோப்பைக்கும் தகுதி பெற்று அசத்தியது.

தோல்வியடைந்த நியூ கலிடோனியா அணிக்கு மற்றுமொரு வாய்ப்புள்ளது. ஆசியா, ஆப்பிரிக்கா, வடக்கு, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க கூட்டமைப்புகளை சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும் கண்டங்களுக்கு இடையேயான பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்றால் நியூ கலிடோனியா உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.

__________________________________________________________________________

எலைட் நடுவர்கள் குழுவில் 2 பேர் 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) எலைட் நடுவர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் அல்லாவுதின் பலேகர் (தென் ஆப்பிரிக்கா), அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து) ஆகிய இரண்டு பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் மொத்தம் 12 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து நிதின் மேனன் மட்டும் இடம் பிடித்துள்ளார். 

இந்த குழுவில் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து 3 பேரும், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து தலா 2 பேரும் இடம் பிடித்துள்ளனர். இந்த குழுவில் இதற்கு முன்னர் இடம் பெற்றிருந்த மைக்கேல் காப் (இங்கிலாந்து), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்) இருவரும் தற்போது இந்த குழுவில் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 15 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 15 hours ago
View all comments

வாசகர் கருத்து