முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக நீதியை நிலைநாட்டும் தி.மு.க. அரசு: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      தமிழகம்
Cm 2025-02-20

Source: provided

சென்னை : முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

அதில் உரையாற்றிய அவர், "தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களில் நிறைவேற்றி வருகிறோம். சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக முழு அர்ப்பணிப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மதிப்போடும், உரிமையோடும், சுயமரியாதையுடனும் நாம் இருக்க பெரியாரும், அம்பேத்கருமே காரணம்.

தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகள் நடப்பாண்டில் 6 சதவீதம் குறைந்துள்ளன.  இதுவரை ஆணையத்துக்கு வரப்பெற்ற 5,191 வழக்குகளில் 4,038 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களின் கல்வி அறிவை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பழங்குடியின மாணவர்கள் தங்கி படிக்க அவர்கள் பகுதியிலேயே பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 30 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது

பழங்குடியினருக்கான நிதியில் இருந்து கல்விக்கு மட்டும் 71.31 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் எளிதில் கல்வி பெற கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான சமமான உரிமைகள் உறுதி செய்யப்படுகின்றன என்றார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி.செழியன், சி.வி.கணேசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து