முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விளையாட்டு வீரருக்கு வாழ்வில் ஏற்றம், இறக்கம் இருப்பது சகஜம் : கேப்டன் ரோகித் சர்மா கருத்து

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      விளையாட்டு
Rohit-Kohli-Bumra 2024-07-1

Source: provided

மும்பை : வாழ்க்கை என்பது ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சாம்பியன்ஸ் டிராபி தொடர் சரியான எடுத்துக்காட்டு  என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஏற்றம், இறக்கம் சகஜம்...

இது தொடர்பாக ரோகித் சர்மா  கூறியிருப்பதாவது:-

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஏற்றம், இறக்கம் மற்றும் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறும் காலம் இருக்கும். இது  எல்லா வீரர்களுக்கும் பொருந்தும்.  நாங்கள் நியூசிலாந்து எதிராக சொந்த மண்ணில் தொடரை இழந்தோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக விளையாடவில்லை. இதனால் எங்களுக்கு சற்று இறக்கம் ஏற்பட்டது. பின்னர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடி கோப்பையை வென்றோம். இந்த 9 மாதங்களும் வாழ்க்கை எப்போதும் ஏற்றம் இறக்கத்துடன் செல்லும் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.

இந்திய அணி சாதனை...

மிகப்பெரிய ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணி என்ன சாதனைப் படைத்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மூன்று தொடரில் ஒரேயொரு முறை, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மட்டும் அணி தோல்வியடைந்துள்ளது. 24 போட்டிகளில் 23-ல் வெற்றி பெற்றுள்ளது. வெளியில் இருந்து பார்க்கும்போது இது சிறப்பானதாக தெரியும், ஆனால், அணி ஏராளமான ஏற்றம் இறக்கத்தை சந்தித்துள்ளது.

கடினமான நேரம்...

நீங்கள் வெற்றியை கொண்டாடும்போது அணிக்கு கடினமான நேரமும் இருந்தது. இதுபோன்ற சாதனைகள் செய்தால் நீங்கள் கொண்டாட வேண்டும். மூன்று தொடர்களிலும் விளையாடிய அனைத்து வீரர்களும் மரியாதைக்கு தகுதியானர்கள் என உணர்கிறேன். இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து