முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருதமலை கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அனுமதி

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      ஆன்மிகம்
Maruthamalai-Murugan-Temple

வடவள்ளி, மருதமலை கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி முதல் யாகசாலை பூஜை பக்தர்களுக்கு அனுமதி

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 4-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 1-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் சக்தி கலசங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்படுகிறது. எனவே 1-ம் தேதி முதல் 3-ந் தேதி வரை யாகசாலையில் உள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 4-ந் தேதி கும்பாபிஷேக விழா முடிந்ததும் வழக்கமான முறையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 2 சக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை. அன்றைய தினத்தில் பக்தர்கள் படி வழியாகவும், கோவில் பஸ்கள் மூலமாகவும் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கின்போது, யாக குண்டங்களில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்விகள் நடத்தப்படும் என சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவாதம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து