முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா - லக்னோ போட்டி ஏப். 8-ம் தேதிக்கு திடீர் மாற்றம்

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      விளையாட்டு
Kolkata 2025-02-24

Source: provided

கொல்கத்தா : பாதுகாப்பு காரணங்களுக்காக கொல்கத்தா - லக்னோ ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 8-ம் தேதிக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பி.சி.சி.ஐ அறிவிப்பு...

நடப்பு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

உரிய பாதுகாப்பு.... 

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் மேற்கண்ட இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த நிலையில், ஏப். 6-ஆம் தேதி கொல்கத்தாவில் பொதுநிகழ்ச்சிகள் பல நடைபெறவுள்ளதாகவும் இதன்காரணமாக அன்றைய நாளில் நடைபெறும் ஐ.பி.எல். ஆட்டங்களுக்கு காவல் துறை தரப்பிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர இயலாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக கே.கே.ஆர். - எல்.எஸ்.ஜி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து