முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: திருச்சி கோர்ட் தீர்ப்பு

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      தமிழகம்
Trichy-Court

திருச்சி, திருச்சியில் மனைவியை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே, கோணக்கரை கிராமத்தில் கடந்த 2024 ஜூன் 1-ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் சிவக்குமார் (வயது54), தனது மனைவி செங்கொடி (வயது 43) நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை குழவிக்கல்லால் தாக்கி கொலை செய்தார். இது தொடர்பாக இறந்தவரின் மகன் சங்கேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில், சிவக்குமார் மீது உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவ்வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அரசு தரப்பு வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜராகி வாதிட்ட நிலையில், திருச்சி முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து அவர் உத்தரவிட்டார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதந்தமைக்காக துறையூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து