முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். வரலாற்றில் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

சென்னை : ஐ.பி.எல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.

ஐ.பி.எல். தொடர்...

ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.  முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மிகப்பெரிய சாதனை... 

இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது.   இந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் ஐ.பி.எல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனை ஒன்றை சி.எஸ்.கே அணி வீரர் ஜடேஜா படைத்துள்ளார். அதாவது ஐ.பி.எல் தொடரில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரசல் உள்ளார். 

1000 ரன்கள் - 100 விக்கெட்டுகள்:

1) ரவீந்திர ஜடேஜா - 3,001 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகள்.

2) ஆண்ட்ரே ரசல் - 2,488 ரன்கள் மற்றும் 115 விக்கெட்டுகள்.

3) அக்சர் படேல் - 1,675 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகள்.

4) சுனில் நரைன் - 1,578 ரன்கள் மற்றும் 181 விக்கெட்டுகள்.

5) டுவைன் பிராவோ - 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து