முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவர் தவழ்கின்ற குழந்தை: விஜய்க்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      தமிழகம்
Sekarbabu-2023 04 06

Source: provided

சென்னை : விஜய் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து மாநில மாநாடு, நிர்வாகிகள் நியமனம் ஆகியவற்றை நடத்தி கட்சியை வலுப்படுத்தினார். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாடு இருக்கும் சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாரும் நன்றாக புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என்று நினைப்பது அரசியலா? இல்லை, ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழ வேண்டும் என்பது அரசியலா

மன்னராட்சி முதல்வரே, உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால், உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். படிக்கிற பிள்ளைகள், சின்னப் பொண்ணுங்க, வேலைக்கு போகிற பொண்ணுங்க, வீட்டில் இருக்கிற பொண்ணுங்க என்று இவர்கள் எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியவில்லை சார். 

இந்தநிலையில் உங்களை அப்பா என்று கூப்பிடுவதாக சொல்கிறீர்கள். தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிற தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார்கள். உங்களின் அரசியல் வாழ்க்கைக்கே ஒரு முடிவு கட்டப்போகிறார்கள். என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, மன்னராட்சி காத்த கரங்கள், மக்களாட்சி காணும் எங்கள் நெஞ்சம். எங்களாட்சி என்றும் ஆளும். சக்திமயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது. பெண்கள் தான் 2026-ஆம் ஆண்டு இந்த ஆட்சியை தூக்கி பிடிப்பார்கள். முதல்வரை வரவேற்பதில் 80 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர். த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வென்றவர்கள் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து