முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் மன்னராட்சி கோரி நேபாளத்தில் போராட்டம்; வன்முறை - இருவர் பலி

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      உலகம்
Suicide 2023 04 29

காத்மாண்டு, நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதனால், தலைநகர் காத்மாண்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்து, கடைகளை சூறையாடினர்.

மற்றொரு சம்பவத்தில், காத்மாண்டு தலைநகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். ஒரு தொலைக்காட்சி கேமராமேன் மற்றும் ஒரு போராட்டக்காரர் என இருவர் இதில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிருத்வி சுப்பா குருங், “இது ஒரு அப்பட்டமான நாசவேலை, தீ வைப்பு, கொள்ளை மற்றும் அராஜகம். இது ஒரு போராட்டமாக இருக்க முடியாது.” என்று கூறினார்.

நேபாளத்தில் 239 ஆண்டு கால மன்னராட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நாட்டின் கடைசி மன்னரான 77 வயதான ஞானேந்திரா, காத்மாண்டுவில் உள்ள ஒரு தனியார் வீட்டில் தனது குடும்பத்துடன் ஒரு சாதாரண குடிமகனாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து