எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி தற்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். சர்வதேச டி20 தொடரில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில், விராட் கோலி அனைத்துப் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு இங்கிலாந்து சென்று குடிபெயர விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
விராட் கோலி ஐ.பி.எல்.லில் இதுவரை 8 சதம், 56 அரைசதம் உள்பட 8094 ரன்கள் விளாசியுள்ளார். இந்தத் தொடரிலும் கொல்கத்தாவுக்கு எதிராக முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். இந்திய வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வேளையில் வேறு நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் விளையாட பி.சி.சி.ஐ. தடைவிதித்திருக்கிறது. இந்த நிலையில், சிட்னி அணியில் விராட் கோலி விளையாட விருப்பதாகவும் அதற்கான 2 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் சிட்னி அணி தெரிவித்திருக்கிறது.
__________________________________________________________________________________________
தரவரிசையில் மெத்வதேவ் சறுக்கல்
சமீபத்தில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் ஜாகுப் மென்சிக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெளியேறினார். இந்நிலையில், ஏ.டி.பி. தரவரிசைப் பட்டியலில் கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு டாப் 10 இடத்தை முதன்முறையாக இழந்துள்ளார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ்.
தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்தில் உள்ளார். இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2வது இடத்திலும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5வது இடத்திலும் உள்ளனர். கடந்த ஆண்டில் நடைபெற்ற எந்த ஒரு டென்னிஸ் தொடரிலும் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
36 செல்போன்கள் திருட்டு: 7 பேர் கைது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
__________________________________________________________________________________________
முக்கிய பட்டியலில் மனிஷ் பாண்டே
ஐ.பி.எல். தொடரின் மும்பை - கொல்கத்தா ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியில் இடம் பிடித்து 19 ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே ஐ.பி.எல். வரலாற்றில் மகத்தான சாதனையை படைத்துள்ளார்.
அதன்படி 2008-ம் ஆண்டில் உதயமான ஐ.பி.எல்.-ல் இதுவரை நடந்துள்ள அனைத்து தொடர்களிலும் ஆடிய டோனி, ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருடன் சாதனை பட்டியலில் மனிஷ் பாண்டேவும் இணைந்துள்ளார். அவர் 2008-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
சென்னையில் கிளப் கூடைப்பந்து
சென்னையில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை முதலாவது சபா கிளப் ஆடவர் கூடைப்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. போட்டியில் உள்ளூர் அணி மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த கிளப் அணிகளும் பங்கேற்கவுள்ளன. போட்டியில் தமிழ்நாடு அணி, கொழும்பு கூடைப்பந்து கிளப் (இலங்கை), டைம்ஸ் கூடைப்பந்து கிளப் (நேபாளம்). திம்பு மேஜிக்ஸ் (பூடான்), டிரெக்ஸ் கூடைப்பந்து கிளப் (மாலத்தீவுகள்) ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த முதலாவது சபா கிளப் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணியானது, வரும் மே மாதம் நடைபெறவுள்ள எப்ஜபிஏ டபிள்யூஏஎஸ்எல் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
__________________________________________________________________________________________
மும்பை அணிக்கு நியூசி. வீரர் பாராட்டு
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய அஸ்வனி குமார் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடிய ரியான் ரிக்கல்டான் அரைசதம் விளாசி அசத்தினார். ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் கேன் வில்லியம்சன் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். டாஸ் வென்றது, பந்துவீச்சைத் தேர்வு செய்தது, கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக அஸ்வனி குமாரை அணிக்குள் கொண்டு வந்தது என அவர்களது திட்டங்கள் அனைத்தையும் அழகாக செயல்படுத்தினார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியது சிறப்பான விஷயம் என நினைக்கிறேன். எதிரணியை பார்ட்னர்ஷிப் அமைக்க அவர்கள் விடவில்லை. ஆட்டம் முழுவதையும் மும்பை இந்தியன்ஸ் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்றார்.
__________________________________________________________________________________________
பட்டோடி கோப்பைக்கு ஓய்வு
2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வாகை சூடும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து புதிய கோப்பை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்பையை ஓய்வு பெறுவதற்கான சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் இரு நாடுகளிலிருந்தும் சமீபத்திய ஜாம்பவான்களின் பெயர்களைக் கொண்ட மற்றொரு கோப்பை உருவானால் அது ஆச்சரியமாக இருக்காது.
__________________________________________________________________________________________
டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் சாதனை
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மும்பையின் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் 9 பந்தில் 27 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளார். அதாவது டி20 கிரிக்கெட் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த இந்தியர்கள் பட்டியலில் 5வது வீரராக சூர்யகுமார் (8,007 ரன்) இணைந்துள்ளார். இந்தப்பட்டியலில் விராட் கோலி (12,976 ரன்), ரோகித் சர்மா (11,851 ரன்), ஷிகர் தவான் (9,797 ரன்), சுரேஷ் ரெய்னா (8,654 ரன்) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 5 days ago |
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
02 Apr 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் கடிதம் அ
-
மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க முதல்வர் உத்தரவு : அமைச்சர் சிவசங்கர் தகவல்
02 Apr 2025சென்னை : பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அளவு பேருந்துகள் இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
-
ஐ.பி.எல். போட்டியில் தொடர் வெற்றிகள்: ஷ்ரேயாஸ் ஐயர் புதிய மைல்கல்
02 Apr 2025மும்பை : சென்னை முன்னாள் கேப்டன் டோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
பஞ்சாப் வெற்றி...
-
கோவையில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தகவல்
02 Apr 2025சென்னை : கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
-
பா.ஜ.க. தலைவர் தேர்வு குறித்து பாராளுமன்றத்தில் அகிலேஷ், அமித்ஷா பேச்சால் கலகலப்பு
02 Apr 2025புதுடெல்லி : சமாஜவாதி கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, பாஜக தலைவர் தேர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
-
தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவு மீட்பு தீர்மானம் - எடப்பாடி பழனிசாமி
02 Apr 2025சென்னை : தேர்தலை நோக்கமாகக் கொண்டு கச்சத்தீவை மீட்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
2-ம் கட்ட திட்டத்திற்காக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம்
02 Apr 2025சென்னை : டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரெயில் ஒப்பந்தம் அளித்துள்ளது.
-
புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்கப்படுமா ? - அமைச்சர் ராஜேந்திரன் பதில்
02 Apr 2025சென்னை : புதுப்பட்டினம் கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் பதில் அளித்தார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம் ஏன்? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்
02 Apr 2025சென்னை, பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
இ-பாஸ் முறைக்கு எதிர்ப்பு: நீலகிரியில் முழு கடையடைப்பு
02 Apr 2025உதகை, நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரி அனைத்து வணிகர் சங்கங்கள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
-
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையைும் வென்றது நியூசி. அணி..!
02 Apr 2025வெல்லிங்டன் : நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
பிரதமர் மோடி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்புக்குழு ஆய்வு
02 Apr 2025ராமேஸ்வரம் : பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேசுவரத்தில் சிறப்பு பாதுகாப்பு குழு ஆய்வு செய்தது.
-
மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தொடங்கியது
02 Apr 2025மதுரை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நேற்று முதல் வரும் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.
-
கேப்டனாக களமிறங்கும் சாம்சன்
02 Apr 2025சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது.
-
லக்னோ வீரருக்கு அபராதம்
02 Apr 2025லக்னோ : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் திக்வேஷ் ரதிக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டமிழந்ததும்...
-
சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்பொழுது?
02 Apr 2025சென்னை : நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4-ம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது.
-
லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப்
02 Apr 2025லக்னோ : ஐ.பி.எல். போட்டியின் 13-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.
-
கோவா அணி கேப்டனாகிறாரா..? - ஐ.பி.எல். மும்பை அணியிலிருந்து விலகம் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..!
02 Apr 2025மும்பை : இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்க மணி கண்டேடுப்பு
02 Apr 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
-
கச்சத்தீவு தீர்மானத்துக்கு பா.ஜ.க. ஆதரவு
02 Apr 2025சென்னை : கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பா.ஜ.க. ஆதரித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-04-2025.
03 Apr 2025 -
குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்
03 Apr 2025புதுடெல்லி, வக்பு சொத்துகளை அபகரித்ததாக குற்றம்சாட்டிய அனுராக் தாகுர் அதனை நிரூபிக்க வேண்டும்.
-
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஐகோர்ட் கிளை தடை: ஐ.ஐ.டி. குழு ஆய்வு செய்ய உத்தரவு
03 Apr 2025தென்காசி, கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்கள்: துணை முதல்வர் திறந்து வைத்தார்
03 Apr 2025சென்னை, திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் ரூ.3.65 கோடியில் புதிய கட்டிடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
நிர்மலா சீதாராமனுடன் தம்பிதுரை எம்.பி திடீர் சந்திப்பு மத்திய அமைச்சர் பதவிக்காக சந்திப்பா? அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
03 Apr 2025சென்னை, மத்திய அமைச்சர் பதவிக்காக நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை என அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.