தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான, அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேரும், ஆஸ்திரேலியாவில் சுமார் 1 லட்சம் பேரும், இலங்கையில் 60 லட்சம் பேரும், அமீரகத்தில் 2 லட்சம் பேர், சிங்கப்பூரில் 2 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 3 லட்சம் பேர், பிஜி தீவில் 50 ஆயிரம் பேர், மொரிசியஸ் தீவில் 50 ஆயிரம் பேர், மலேசியா, கனடா, தென்னாப்பிரிக்காவில், ரீயூனியன் தீவு என பல நாடுகளில் நம்மவர்கள் அதிகம் வசிக்கின்றனராம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
யாரெல்லாம் தூக்கத்தை தொலைக்கிறார்களோ அவர்களுக்கு யோகா நித்ரா ஆசனம் உதவும். 20 நிமிடங்கள் இந்த ஆசனத்தை செய்தால் 2 மணி நேரம் அதிகமான தூக்கத்தை பெறலாம். ஓய்வின்மை, பாதுகாப்பின்மையால் வெறுப்பு, கவலை உளைச்சல் மற்றும் பயத்திலிருந்து காக்கும். மன உறுதியை வளர்த்துக் கொள்வீர்கள். வயோதிகம் கட்டுப்படுத்தப்படும். சக்தி அதிகரிக்கும்.
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள அக்ரோ நிறுவனம் ஒன்று பறக்கும் ஆம்புலன்சை உருவாக்கியுள்ளது. நோயாளியையும், உடன் ஒரு மருத்துவ உதவியாளரையும் சுமந்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே லைவ் கேமரா வசதியும், ஆடியோ கனெக்ஷனும் இருப்பதால், மருத்துவமனைக்கு வந்து சேர்வதற்குள் நோயாளியின் நிலைமையை ஆராய்ந்து, தகுந்த மருத்துவ ஆலோசனைகளை உதவியாளருக்கு கொடுக்க முடியும். இந்த ட்ரோன், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். அவசர காலத்தில் சிட்டாய் பறக்கும் இந்த ட்ரோனுக்கு ஓட்டுனர் இல்லை மற்றொரு ஆச்சரியம். ஜி.பி.எஸ் வைத்து லொகேஷனை அடையாளம் கண்டு, தானாக பறந்து செல்கிறது. இதன் விலை சுமார் ஆறு கோடியாம்.
பரங்கி மலை இந்தியாவின் பழமையான வரலாற்று சின்னங்களில் ஒன்று. இந்திய நிலவியல் வரை படத்தை தயாரித்த ஆங்கிலேயர்கள் இந்த மலையிலிருந்துதான் இமய மலையை அளவு எடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது. கடல் மட்டத்தில் இலிருந்து 300 அடி உயரமுள்ள இந்த மலையில்தான் செயிண்ட் தாமஸ் செதுக்கிய கற்சிலுவை ஒன்று இங்கு இன்றும் புழகத்தில் உள்ளது. ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் கேரளா வழியே சாந்தோம் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை சின்னமலைக்கு இடம்பெயர்ந்து இறுதியாக இந்த மலைக்கு வந்து சேர்ந்ததாக கிறிஸ்துவ பெருமக்கள் நம்புகிறார்கள். இந்த மலைக்குச் செல்வதற்கு, 135 படிக்கட்டுகளைக் கொண்ட பாதையை ஆர்மீனியர்கள் அமைத்தனர். புனித தோமையரின் சிறு எலும்புத் துண்டு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12 திருத்தூதர்களின் திருப்பண்டங்கள் (எலும்புத் துண்டு, சதைத் துண்டு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்) உட்பட 124 புனிதர்களின் திருப்பண்டங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, புனித லூக்காவினால் கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்டு, தோமையரால் இம்மலைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் அன்னை மரியாவின் ஓவியமும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.
கேட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நாம் அனைவருக்கும் தெரியும் இந்த பிரபஞ்சத்திலேயே உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கிரகம் பூமிதான். அது சரி. அதை விட ஆச்சரியம் என்னவென்றால் மில்கிவே என அழைக்கப்படும் கேலக்ஜியில் உள்ள நட்சத்திரங்களை காட்டிலும் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். 20215 இல் நேச்சர் இதழில் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டிருந்த தகவலின்படி மில்கிவேயில் சுமார் 100 முதல் 400 மில்லியன் வரைதான் நட்சத்திரங்கள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாம். அதாவது 3.04 ட்ரியல்லியன் என்கிறது அந்த ஆய்வு. ஆச்சரியம் தானே..
இளம் வயதில் தொண்டைப் புண்ணோ, கை, கால் மூட்டுக்களில் வீக்கமோ, ருமாட்டிக் காய்ச்சலோ வந்தால், அவை இதயத்தைப் பாதிக்கலாம். வருடம் ஒரு முறை ரத்தக் கொழுப்பு, சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இசிஜியும் செய்து பார்க்கலாம். குடும்பத்தில் இளவயது மாரடைப்பால் பாதிக்கப்பட்டோர் இருப்பின், மற்ற நபர்கள், 25 வயதிலிருந்தே, இந்த வருடாந்திர சோதனைகளை ஆரம்பிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
நவரச கலைக்கூடம் வழங்கும் நெஞ்சு பொறுக்குதில்லையே
26 Nov 2024நவரச கலைக்கூடம்" என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படத்திற்கு "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்ற த
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
அசோக்குமார் நடிக்கும் லாரா
26 Nov 2024காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார்.
-
கார்த்தி வெளியிட்ட மிஸ் யூ ட்ரெய்லர்
26 Nov 20247 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’.
-
பராரி விமர்சனம்
26 Nov 2024திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதிக்க சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது சாதி ரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ: