முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கொழுப்பை கரைக்கும்

3 வாரங்கள் தினமும் ஒரு கப் காரட் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரால் அளவு 11% குறைவதாக அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காரட்டில் உள்ள எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்தினால் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. மேலும் மாலைக் கண் நோயை தடுக்கும். புற்று நோயிலிருந்து காக்க காரட் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி

இன்றைக்கு எந்த ஒரு ஆண்டுவிழா, பள்ளி, கல்லூரி விழா என்றால் தவறாமல் இடம் பிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி இடம் பெறும். இருந்தாலும் இதையெல்லாம் யாரும் விளையாட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன என்றால் ஆச்சரியம் தானே.. 1900 தொடங்கி 1920 வரையிலான காலகட்டத்தில் இந்த விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டி உள்பட 33 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டன.

குழந்தைகளின் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகம்

மனித உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206 என்பது பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் குழந்தை பிறந்தவுடன் அதன் உடலில் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும். வளர்ந்த மனிதனின் உடலில் காணப்படுவதைப் போல அல்லாமல் குழந்தையின் உடலில் 300 எலும்புகள் காணப்படும். மனிதன் வளர வளர அவற்றில் ஒரு சில எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இறுதியில் 206 என்ற எண்ணிக்கைக்கு வந்து விடுகின்றன. என்ன ஆச்சரியம் பாருங்கள்..

விட்டில்களின் சத்தத்தை வைத்து இன்றையதட்ப வெப்பத்தை சொல்லி விட முடியுமா?

இதென்ன புதுசா இருக்கு.. என்கிறீர்களா... ஆம் விட்டில் பூச்சிகளின் சத்தத்தை வைத்து தட்ப வெப்ப நிலையை நம்மால் கூறிவிட முடியும் என்றால் ஆச்சரியம் தானே... நாம் எப்போவாது இயற்கையை உற்று கவனித்திருந்தால்தானே இதெல்லாம் புரிய போகிறது. இதையெல்லாம் நவீன அறிவியல் விஞ்ஞானிகள் வந்து கண்டு பிடித்து சொல்லும் அளவுக்கு இயற்கையில் இருந்து அந்நியமாகி விட்டோம். சரி கதைக்கு வருவோம்.. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விட்டில் பூச்சிகளின் சத்தத்தை கவனியுங்கள்... ஒரு நொடிக்கு எத்தனை என கணக்கிட்டு கொள்ளுங்கள்.. உதாரணமாக விநாடிக்கு 15 முறை சத்தமிடுகிறிது என வைத்துக் கொள்வோம்.. அதோடு 37 ஐ கூட்டுங்கள்... அவ்வளவுதான் இதுதான் அன்றைய வெப்ப நிலை.. இதை வைத்தே சூழலின் தட்ப வெப்பத்தை சொல்லிவிட முடியும் என்றால் ஆச்சரியம் தானே.

டிஜிட்டல் மாத்திரை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.

விபத்தை தடுக்க

ரயிலில் மட்டும் நாம் விரும்பும் இருக்கையை தேர்வு செய்ய முடியாது அதற்கு காரணம் உண்டு. நாம் டிக்கெட் பதிவு செய்யும் போது, எல்லா கோச்சிலும், மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதற்கடுத்து இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும். பர்த் பதிவுகளும் இப்படி தான். ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதனால் தான் ரயில்கள் வேகமாக பயனிக்கும் போது விபத்து ஏற்படாமல் பயணிக்க உதவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago