நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை குணப்படுத்த நேரடி மருந்து மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபயாடிக்) மருந்துகளையும் வழங்குவது வழக்கம். இது கிருமிகள், பாக்டீரியாக்களை கொன்று நோயை குணப்படுத்தும். வருங்காலத்தை கருத்தில் கொண்டு விஞ்ஞானிகள் புதிய நோய் எதிர்ப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே வான்கோமைசின் என்ற நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் இருந்தது. அந்த மருந்தால் இப்போது பலன் இல்லை. இதே மருந்தை மேலும் வீரியப்படுத்தும் வகையில் ஆய்வு செய்தனர். அதில் புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து 1000 மடங்கு சக்தி கொண்டதாக இருக்கிறது. எனவே கிருமிகளால் உருவாகும் அனைத்து நோய்களையும் இது கட்டுப்படுத்துமாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர். அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது பூமி என்று இதன் பொருளாகும். தமிழில் மட்டும் பூமிக்கு 62 சொற்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பூமிக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் "எர்த்" என்ற பெயர் ஆயிரம் ஆண்டு பழமையானது. இதில் சுவாரசியம் என்னவென்றால் பூமியைத் தவிர்த்த மற்ற அனைத்து கோள்களுக்கும் கிரேக்க, ரோமானிய ஆண், பெண் கடவுள்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. அதேநேரம் பூமிக்கு "எர்த்" என்ற பழைய ஆங்கிலா சாக்ஸன் மொழியால் ஆன பெயர் சூட்டப்பட்டது. நிலப்பகுதி என்ற எளிமையான அர்த்தம் கொண்ட சொல் அது. பழைய ஆங்கிலத்தில் எர்தா (ertha ) என்றும், ஜெர்மனில் எர்டே (erde) என்றும் குறிக்கப்படுகிறது.
ஒரு சில குழந்தைகள் பிரசவத்துக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு. அவை 8 அல்லது 9 மாதத்தில் பிறந்தாலும் போதிய வளர்ச்சி இருந்தால் அவற்றை இன்குபேட்டர் எனப்படும் மருத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பராமரித்து தேற்றி விடுவர். ஆனால் உலகின் மிகப் பெரிய அதிசயமாக வெறும் 21 வாரத்தில் பிறந்த குழந்தை தற்போது வளர்ச்சி அடைந்து உயிர் பிழைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்குத்தான் கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 21 வாரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போது அதன் எடை வெறும் 420 கிராம் மட்டுமே. பொதுவாக பிரசவ காலம் என்பது 280 நாட்கள், ஆனால் இந்த குழந்தை 148 நாட்களிலேயே பிறந்து விட்டது. மிகவும் நுட்பமான மருத்துவ கவனிப்பின் மூலம் அந்த குழந்தை தற்போது 16 மாத குழந்தையாக உயிர் பிழைத்துள்ளது. இதில் மற்றொரு அதிசயமாக இரட்டையராக பிறந்த இந்த குழந்தையுடன் பிறந்த மற்றொரு பெண் குழந்தை பிறந்த ஒரு நாளிலேயே இறந்து விட்டது என்பதுதான். இந்த குழந்தையை பிரசவம் பார்த்த டாக்டர் பிரெய்ன் சிம்ஸ் கூறுகையில் எனது 20 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததேயில்லை என வியந்துள்ளார். இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர். இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..
ஐஸ்க்ரீம் உருகுவதைத் தடுக்க ஜப்பான் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். ஜப்பானில் உள்ள கனஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஐஸ்க்ரீம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் 3 மணி நேரத்துக்கு அந்த ஐஸ்க்ரீம் உருகாமல் இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ட்ராபெரி பழத்திலிருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் என்ற திரவத்தை ஐஸ்க்ரீமில் செலுத்தி சோதனையில் வெற்றி அடைந்துள்ளனர். இந்த திரவத்தை செலுத்தியபின் ஐஸ்கீரிமை அனல் காற்றில் காண்பித்தாலும் சுமார் 5 நிமிடம் வரை ஐஸ்க்ரீமின் வடிவம் மாறவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முடிவை மருத்துவர்கள் அளிக்கும் முடிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அது 69 சதவிகிதம் துல்லியமாக இருக்கிறது. மேலும், ஒருவரின் உடலுக்குள் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க, இது உதவியாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூலம் நோய்களை வரும் முன்பே கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.