நகைகள் என்றாலே உலகம் முழுவதும் முன்னணியில் இருப்பது தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள்தான். இவற்றில் பெரும்பாலும் இவை அனைத்தும் இயற்கை முறையில் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. தங்கத்தை செயற்கையாக ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது பெரும் செலவு பிடிக்கும் காரியம் என்பதால் யாரும் இதுவரை அதில் ஈடுபடவில்லை. வைரத்தில் இதுவரை செயற்கை வைரம் என கூறப்பட்டவை அனைத்தும் விலை மலிவான வைரமாகவே இருந்து வந்தது. ஆனால் முதன்முறையாக இயற்கை வைரத்துக்கு இணையாக மதிப்புள்ள செயற்கை வைரத்தை நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று தனது ஆய்வகத்தில் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜூவல்லரி பிராண்டான பந்தோரா முதன்முறையாக தனது ஆய்வகத்தில் தயார் செய்த செயற்கை வைரத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் மற்றொரு பிராண்டான பந்தோரா பிரில்லியன்ஸ் ஏற்கனவே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் புதிய முயற்சி 2022 இல் உலக சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கேரள மாநிலத்தில் அதிகமான சிலைகளை கொண்டுள்ள நகரம் எது என்று தெரியுமா.. அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்ட மாதவராவ் என்பவரின் சிலையில் தொடங்கி தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு சிலைகளின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு
ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் 600 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு போட்டோ மட்டுமே இதுவரை அனுப்ப முடியும். ஆனால் தற்போது பல புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் புதிய வசதி அப்டேட் ஆகியுள்ளது.
உடலில் ஏற்படும் பிரச்னையை முன்கூட்டிய கண்டறியும் ரோபோ ஒன்று இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. HUNOVA என்ற இந்த ரோபோவில் அமர்ந்தோ, நின்ற நிலையிலோ இருக்கும் போது உடலில் ஏற்படும் மூட்டுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பயோ மெட்ரிக் மூலம் கண்டுபிடித்து சொல்லிவிடுமாம்.
எகிப்தை சேர்ந்த எமான் என்ற 40 வயது பெண் பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கை ஆனார். படுக்கையிலேயே 25 ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரது உடல் எடை தற்போது 500 கிலோவை தொட்டுள்ளது. உலகிலேயே குண்டான பெண்ணான இவருக்கு, மும்பையை சேர்ந்த டாக்டர் முப்பஷால், உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளவுள்ளார்.ஆனால் அரை டன் எடை கொண்ட இவரை ஏற்றிவர தனியார் விமான நிறுவனங்கள் கைவிரித்துவிட்டன. இவரை இந்தியா அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், இவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் வகையில் ரூ.2 கோடி செலவில் மருத்துவமனையில் பிரத்யேக அறையை உருவாக்கி வருகின்றனர். இந்த அறையில், டாக்டர்கள் அறை, கண்காணிப்பாளர் அறை, 2 கழிவறைகள், வீடியோ கான்பரன்சிங் அறை ஆகியவை இடம் பெறுகின்றன.
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (HiRISE ) மூலம் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.