கொல்கத்தா என்று தற்போது அழைக்கப்படும் நகரம் முன்பு கல்கட்டா என கூறப்பட்டது. இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் கொல்கத்தாவில்தான் தொடங்கப்பட்டது. முதல் செய்தித்தாள் வெளியானதும் கொல்கத்தாவில்தான். கொல்கத்தாவில்தான் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ஹூக்ளி நதியின் மீது ஹெளரா - கொல்கத்தா நகரங்களை இணைக்கக் கட்டப்பட்டுள்ள ஹெளரா பாலம் மிகப் பழமையானது. 1943ல் இது திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் தபால் நிலையம் கொல்கத்தாவில்தான் உள்ளது. பிர்லா கோயில், ஜெயின் கோயில் ஆகியவை கொல்கத்தாவில் சிறப்பு வாய்ந்த இடங்களாகும். அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கத்தா. இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டன் அமைந்துள்ள நகரம். பிரபலமான எழுத்தாளர் கட்டடம் அமைந்துள்ளது கொல்கத்தாவில்தான்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு மூலம், தானாகவே இயங்கும் ரோபோ கார் அறிமுகமாகியுள்ளது. சென்சார் மூலம் இந்த காரின் சக்கரங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. செயற்கைக் கோள் மூலம் கார் செல்லும் பாதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிக்கு 320 கி.மீ வேகத்துக்கு செல்லுமாம்.
விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது செத்தவரை மலையில் ஆவணம் செய்யப்படாத புதிய பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர்.செத்தவரை ஊரின் தெற்கு மூலையில் செத்தவரை மலைகள் தொடங்கும் இடத்தில் கும்பசுனை என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில் இரண்டு இடங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் மற்றும் இதனருகே உள்ள பாறையில் வெண்சாந்து ஓவியமும் இருப்பது கண்டறியப்பட்டது. ஓவியத்தில் மான் ஒன்றும் அதன் அருகே யானை போன்ற ஒரு உருவம் காணப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள செஞ்சாந்து ஓவியத்தில் இரு மனிதர்கள் மட்டும் உள்ளனர். மேலும் அருகில் உள்ள மற்றொரு குன்றிலும் ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையாவும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதலாம். இதன் காலம் சுமார் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படுவது எச்1 பி விசா. இந்த விசா ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அதிக எண்ணிக்கையில் எச்1பி விசாக்களை வழங்குகிறது. எச்1பி விசாக்களை வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதுதான் L1 விசா.
பொதுவாக காதலர் தினம் என்றால் அனைவருக்கும் பிப்ரவரி 14 மட்டும் தான் ஞாபகம் வரும். ஆனால் காதலர் தினமானது பிப்ரவரி 7 ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. காதலர் தின வாரத்தின் முதல் நாள் ரோஸ் டேவில் ஆரம்பித்து ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, இறுதியாக கிஸ் டேவில் முடிவடைகிறது.
யோகாசனம் ஒரு அற்புதமான கலை. கை விரல்களால் செய்வதுதான் முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். இந்த முத்திரைகளை உட்கார்ந்திருக்கும் போதோ, நிற்கும்போதோ, நடக்கும்போதோ செய்யலாம். வஜ்ராசனம், பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது அதிக நன்மை அளிக்கும். சின் முத்திரை அல்லது ஞான முத்திரை செய்வதால் மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும். வாயு முத்திரை செய்வதால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும். சூன்ய முத்திரை செய்வதால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2024.
26 Nov 2024 -
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.