முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வீட்டு வைத்தியம்

கடுக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு போன்றவை பல் வலி, ஈறுவீக்கம் பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. கடுக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. துவர்ப்பு சுவை நிறைந்த இது பற்களில் ஏற்படும் பிரச்னையை குணப்படுத்துகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. சுக்கு பற்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. மாசிக்காய் பொடி மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. பல் வலியை சரிசெய்ய கூடியது. பூண்டு, இந்துப்பு ஆகியவையும் பல் நோய்களுக்கு மருந்தாகிறது.

வெள்ளை சர்க்கரை என்ற சீனியை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

நாம் அனைவரும் தினமும் பயன்படுத்தும் சுவையான பொருள் வெள்ளை சர்க்கரை எனப்படும் சீனி. கரும்பு, பீட்ரூட், பனை போன்றவற்றிலிருந்து தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட சர்க்கரை வெள்ளை நிறத்தில் கிடையாது. பழுப்பு நிறத்திலேயே வந்தது. அதை வெள்ளையாக மாற்றியது யார் தெரியுமா... இந்தியர்கள்தான். வெள்ளை சர்க்கரையாக பிரித்தெடுத்தல் மற்றும் சுத்திகரிப்பு நுட்பங்களை நமது இந்தியா தான் முதல் முதலில் உருவாக்கியுள்ளது. சர்க்கரை தயாரிக்கும் முறை இந்தியாவில் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்து வந்த இந்த தொழில் நுட்பம் சீனா, பெர்சியா மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கு பரவி இறுதியில் 13 ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடலை அடைந்துள்ளது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சர்க்கரை ஒரு அரிய பொருளாகவும் மிகவும் விலையுயர்ந்த பொருளாகவும் கருதப்பட்டுள்ளது.

ஸ்ட்ராபெர்ரி என்பது ஒரு தனிப்பட்ட பழம் அல்ல என்பது தெரியுமா?

ஸ்ட்ராபெர்ரி என்று நாம் சாப்பிடும் பழம், பெர்ரி வகையைச் சேர்ந்தது அல்ல. ஆனால் வாழைப்பழம் பெர்ரி வகையைச் சேர்ந்தது. சீதாப்பழம் என்பது ஒரே பழம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனி. Compound fruit என்பார்கள். தாவரவியல் பாஷையில் சொன்னால் கூட்டு மஞ்சரி மலர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கனியைப் போல இவ்வாறு உருவாகியுள்ளது. ஒரே பழத்துக்குள் பல்வேறு பழங்கள் ஒட்டுமொத்தமாக பொதிந்து வைக்கப்பட்டதைப் போல காட்சியளிக்கும். அதற்கு நமது சீதா பழம் தான் மிக சிறந்த உதாரணமாகும். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

மாற்றி சேமிக்க....

ஒளியை ஒலி வடிவாகவும், ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்க முடியும். இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர்  என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்குமாம்.

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வான் கோழிகள் ஒரு காலத்தில் கடவுளாக வணங்கப்பட்டன

அமெரிக்காவின் பிரபலமான உணவு வகைகளில் வான்கோழி இறைச்சியும் ஒன்றாகும். ஆனால் இன்றைக்காக வளர்க்கப்படும் வான்கோழிகள் ஒரு காலத்தில் தெய்வீக அம்சம் கொண்டவகையாக வணங்கப்பட்டு வந்துள்ள. கிமு 300 களில் மயன் நாகரிக மனிதர்கள் தான் வான்கோழியை வணங்கி வந்துள்ளனர். அவர்களின் முக்கிய மத சடங்குகளில் வான்கோழி பிரதான பங்கு வகித்து வந்துள்ளன. மயன் நாகரிகத்தில் ஆற்றல் மற்றும் பெருமையின் அடையாளமாக விளங்கின. அவர்களின் பல்வேறு தொல் எச்சங்களிலும் வான்கோழிகள் அடையாளப்படுத்தப்படுகின்றன என ஆய்வாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago