இதென்ன புதுசாக இருக்கே என்று யோசிக்கிறீர்களா... ஒவ்வொரு நாட்டுக்கும், கலாச்சார மக்களுக்கும் பல்வேறு வகையான கால கணக்கு அதாவது காலண்டர், நம்மூர் பாஷையில் சொன்னால் பஞ்சாங்கம் உள்ளது. அதன் படி எத்தியோப்பியாவின் காலண்டரில் 13 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதத்துக்கும் 30 நாட்கள். கடைசி மாதமான பகுமே என்ற மாதத்தில் மட்டும் 5 நாட்கள். இதனால் இவர்கள் எப்போதும் மற்ற நாடுகளின் காலத்துடன் ஒப்பிடும் போது 7 ஆண்டுகள் பின்தங்கியே உள்ளனர். அவர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தை செப்டம்பர் 11 ஆம் தேதிதான் கொண்டாடுகின்றனர். புதிய நூற்றாண்டு தொடக்கத்தை அவர்கள் 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல்தான் கொண்டாடினர் என்றால் ஆச்சரியம் தானே
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
மனிதன் கொஞ்சம் தாழ்வுணர்ச்சி கொண்டவன். அதிகமாக சாகச விரும்பி. இதை சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இயற்கையோடு தன்னை ஒப்பிட்டுக் கொண்டு அதை வெல்ல வேண்டும் என ஓயாத மன அரிப்பை கொண்டிருப்பதால் தாழ்வுணர்ச்சி கொண்டவன் என்கிறோம். அதை வெல்ல வேண்டும் உந்துதலால் எதையாவது செய்து கொண்டிருப்பதால் சாகச விரும்பி ஆனான். அதற்கு சிறந்த உதாரணம் பெரு நாட்டில் உள்ள தொங்கும் விடுதி. அது என்ன தொங்கும் விடுதி. பெருவில் உள்ள மச்சு பிச்சு என்ற உலக அதிசய இடத்துக்கு செல்லும் வழியில் கஸ்கோ என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1300 அடி உயரத்தில் மலைக்குன்றில் ஒட்ட வைத்தது போல சுமார் 300 டிகிரி கோணத்தில் பார்க்கும் வகையில் விடுதி அறைகளை கட்டியுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த ரிசார்ட்டுக்கு கம்பி வழியாக தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அங்கிருந்து பெருவின் அழகை மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மலை மற்றும் வான் மேகங்களின் அழகை ரசிக்கலாம்.. ஆனால் நமது உடலும் இதயமும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்.. என்ன பெருவுக்கு போகலாமா..
ஆண்ட்ராய்டு செயலிகள் உள்ள மொபைல் போன்கள் மூலம் ஒருவரின் இருப்பிடம் மற்றும் பயணிக்கும் இடங்கள் ஆகியவற்றை உளவு பார்க்க முடியும் என அமெரிக்காவின் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். எனவே ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும் முன் எச்சரிக்கையாக செயல்பட அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள். அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்ததாக உள்ளதாம்.கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இருளில் மனித உடல் ஒளிரும் என்பது உங்களுக்கு தெரியுமா.. ஒரு நாளில் மிக குறைந்த அளவிலோ, மிக அதிகமாகவோ உடல் ஒளிர்கிறது. ஆனால் அதை நாம் வெறும் கண்ணால் பார்க்க இயலாது. அது வெளியிடும் ஒளியின் அளவானது நமது கண்கள் உணரும் திறனை விட 1000 மடங்கு குறைவானதாகும். ஆனால் இந்த ஒளியானது அகச்சிவப்பு கதிர்களிலிருந்து மாறுபட்டது. அது உடலின் வெப்பத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ஒளி உமிழும் உடலின் திறனானது காலை 10 மணி அளவில் மிக குறைவாகவும், மாலை 4 மணி அளவில் உச்சத்திலும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முற்றிலும் ஒளியற்ற அரையில் ஆரோக்கியமான நபர்களை நிறுத்தி வைத்து குறைவான ஒளியில் படம் பிடிக்கும் கேமராவை கொண்டு விஞ்ஞானிகள் இதை படம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை... குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலும் அவை நீராகவே இருக்கின்றன. அவர்களது உடலில் 75 சதவீதம் நீரே இருப்பதாக நாசாவின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதன் வளர வளர தனது நீர்ச்சத்தை இழப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்த மனிதர்கள் 55 முதல் 60 சசதவீதம் வரையில் நீரை இழக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன அற்புதம் பாருங்கள் உடல் நீராலானது என்றால் ஆச்சரியம் தானே.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 3 weeks ago |
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
26 Nov 2024திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
26 Nov 2024சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலி
26 Nov 2024திருச்சூர், கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன்: 10 அணிகளில் இடம்பெற்ற வீரர்களின் முழு விவரம்
26 Nov 2024புதுடெல்லி : 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி; தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் கவுதம் காம்பீர்
26 Nov 2024மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம்