1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி ரூபாய் நோட்டுகளில் தமிழ் மொழி இடம் பெற்றிருந்தது நமக்கு தெரியும். அதைவிட பெருமை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான 8 மொழிகள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வந்தன. அதில் ஹிந்தி இடம்பெறவில்லை. இந்தி மொழியானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்தி மொழியானது பெரும்பாலும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற துவங்கின. இந்நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா நூற்றாண்டை போற்றும் வகையில் 2009 இல் சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. நினைவு நாணயங்களில் தலைவர்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் மட்டுமே பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அண்ணாவின் நாணயத்தில் அவரது சிறப்புப் பெயரான ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என்று பொறிக்கப்பட்டிருப்பது வேறு எந்தத் தலைவருக்கும் கிடைக்காத சிறப்பு. அதேபோல், அண்ணாவின் கையெழுத்தைத் தாங்கியிருக்கும் இந்த நாணயம், தமிழ் மொழி இடம்பெற்றிருக்கும் ஒரே நாணயமாகவும் திகழ்கிறது.
பறவைகள் மட்டும்தான் பாடுமா, நாய்களில் சில இனங்களும் பாடுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரிய வகை நாய்கள் நியூ கினியாவில் உள்ள காட்டு நாய்கள் இனமாகும். இவை அழிந்து விட்டதாக கருதிய வேளையில் தற்போது அவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீனா, சோங்சிங் மாநிலத்தில் நடன குழு ஒன்றிற்கு 5 வயது சிறுமி ஒருவர் ஆசிரியையாக உள்ளார். டைலான் ஜிங்யீ என்ற சிறுமி, கடந்த நவம்பரிலிருந்து இந்த நடன குழுவை வழி நடத்தி வருகிறார். டைலான் தனது நடன பயிற்சியை 2 மாதத்தில் முடித்து விட்டு தற்போது நடனஆசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் வசித்து வருபவர் Minati Patnaik. 63 வயதான இவர் கணவரை இழந்து விட்டார். கணவரை இழந்த 1 வருடத்துக்குள் தனது மகளையும் இழந்துள்ளார். இதனால் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி புத்தா சமல் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இன்றி Minati Patnaik க்கு உதவி வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள், தங்கம் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு அளிப்பதாக உயில் தயார் செய்து வைத்துள்ளார். இது குறித்து Minati Patnaik கூறுகையில், சிறு வயது முதலே எனது குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து சென்று வருபவர் புத்தா சமல். எனது கணவர் இறந்த பிறகு என்னை மிகவும் கவனத்துடன் எந்த பிரதிபலனும் பாராமல் அவரும், அவரது குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர். எனக்கு பிறகு எதிர்காலத்தில் சட்டரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காக எனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து, நகைகள் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு உயிலாக எழுதி வைத்துள்ளேன். காசு பணம் என்பதையும் தாண்டி மனித உறவுகள் தான் மதிப்புமிக்கவை என்பதற்கு உதாரணமாக புத்தா சமல் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்திற்காக உழைத்துள்ளனர் என்றார் நெகிழ்ச்சியாக. அவரது இந்த கருணையுள்ளதை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அதிகபட்சமாக தினசரி 8 மணி நேரம் நன்றாக அயர்ந்து தூங்கினால் உடலுக்கு நல்லது என்ற பொதுவான கருத்து உள்ளது. தற்போது குறைந்தது தினந்தோறும் 6 மணி நேரத்துக்கு குறையாமல் தூங்க வேண்டும். இல்லாவிடில் உடலில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பு அபாயம் உருவாகுமாம். இதுகுறித்து சமீபத்தில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் 6 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கியவர்கள் நீரிழிவு, அதிகபட்ச ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் நோய்கள் ஏற்படுகிறதாம். அதன் மூலம் 2 மடங்கு உயிரிழப்பு அபாயம் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தூக்கம் குறைவதால் இருதய நோய்கள், பக்க வாதம், மூளையில் பாதிப்பு போன்றவையும் உருவாகும். எனவே நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
26 Nov 2024திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
-
தம்பி ராமையா மகன் இயக்கும் ராஜா கிளி
26 Nov 2024மிக மிக அவசரம், மாநாடு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’.
-
விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
26 Nov 2024சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
பணி விமர்சனம்
26 Nov 2024கேரள மாநிலம் திருச்சூரில் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தோடு வலம் வருகிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ்.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன்: 10 அணிகளில் இடம்பெற்ற வீரர்களின் முழு விவரம்
26 Nov 2024புதுடெல்லி : 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி; தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் கவுதம் காம்பீர்
26 Nov 2024மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம்
-
கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலி
26 Nov 2024திருச்சூர், கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.