நம்மில் பெரும்பாலோனோர் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தவர் ஆந்திராவைச் சேர்்ந்த சுதந்திர போராட்ட தியாகி பிங்கலி வெங்கய்யா என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் தேசிய கொடியின் அடிப்படையை உருவாக்கி காந்தியிடம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக தேசிய கொடியை வடிவமைத்தவர்கள் பக்ரூதீன்தியாப்ஜியும் அவரது மனைவி சுரேயாவும் தான். இதற்கான பொறுப்பை நேரு, பக்ரூதீனிடம் அளித்தார். இந்த குழுவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். மூவர்ண கொடியையும் அதன் மத்தியில் அசோக சக்கரத்தையும் அவர்கள்தான் வடிவமைத்தனர். தேசிய கொடிக்கு ஏற்ற வண்ணத்தை நெய்து கொடுத்தவர் சுரேயா. 1947 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி இவர்கள் நேருவிடம் அளித்த கொடி அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது. தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.
வாழைப்பழம் நார்சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்களை கொண்டது. 12 நாட்கள் தினமும் வெறும் வாழைப்பழம் மட்டுமே சாப்பிட்டு வந்தால் உடல் மிகுந்த ஆரோக்கியம் உடையதாகவும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். இந்த டயட் மேற்கொள்ளும் போது. கட்டாயம் ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பச்சை கீரை வகைகள் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
சீனத் தலைநகர் பெய்ஜிங் - தொழில்நகரமான ஷாங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவை சீனாவில் வரும் இந்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.
தேனை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து ஸ்கரப் செய்து கழுவவேண்டும். இது சரும துளைகளில் அடைப்புக்களை ஏற்படுத்தாமல் அதில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். எனவே இனிமேல் சோப்பு தேவையின்றி முகத்தை சுத்தம் செய்யலாம்.
பூவரசம் பூ, ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியது. மருதாணி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு ஆரோக்கியம் தரவல்லது. தோலுக்கு அழகை தருகிறது. நகப்பூச்சாக பயன்படுகிறது. அருகம்புல் ரத்தத்தை சுத்தப்படுத்தும் மூலிகையாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்புக்கான மருந்தாக விளங்குகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 weeks ago |
-
சென்னையில் சி.பி.ஐ. சோதனை
26 Nov 2024 -
போர் விமானம் தயாரிப்பு: எலான் மஸ்க் விமர்சனம்
26 Nov 2024வாஷிங்டன், ஆளில்லாத ட்ரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் இன்னும் முட்டாள்கள் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று டெஸ்லா நிறுவன உர
-
கடலூர், மயிலாடுதுறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
26 Nov 2024கடலூர், மயிலாடுதுறை, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கனமழை, புயல் எச்சரிக்கை: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
26 Nov 2024திருச்சி : கனமழை, புயல் தொடர்ச்சியாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
-
நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் உக்ரைனில் ரஷ்யா வான்வழி தாக்குதல்
26 Nov 2024கீவ், உக்ரைனின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கள்கிழமை(நவ.
-
விருகம்பாக்கம் கால்வாய் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
26 Nov 2024சென்னை, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
-
உருகுவே அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி
26 Nov 2024மான்டிவீடியோ:
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: விழுப்புரத்தில் முதல்வரின் கள ஆய்வு கூட்டம் ஒத்திவைப்பு
26 Nov 2024சென்னை, வரும் 28, 29ம் தேதிகளில் விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த கள ஆய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். பேட்டி
26 Nov 2024சென்னை, புயல், மழையை எதிர்கொள்ள அரசு துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
18-வது ஐ.பி.எல். 2025 சீசன்: 10 அணிகளில் இடம்பெற்ற வீரர்களின் முழு விவரம்
26 Nov 2024புதுடெல்லி : 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.
-
பார்டர்-கவாஸ்கர் டிராபி; தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பும் கவுதம் காம்பீர்
26 Nov 2024மெல்போர்ன் : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம்
-
கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலி
26 Nov 2024திருச்சூர், கேரளாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்தில் தமிழர்கள் 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 20-ம் தேதி இடைத்தேர்தல்
26 Nov 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.