முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

முகத்தை செல்போனால் ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பது தெரிந்து விடும்

உலகதத்திலேயே முதன் முறையாக செல்போனால் முகத்தை ஸ்கேன் செய்தால் கொரோனா இருப்பதை கண்டறியும் தொழில் நுட்பம் அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் உள்ள கண்டறியப்படும் நிலையில் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் அனைத்திலும் கொரோனா சோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் கொரோனா சோதனை செய்ய புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அபுதாபியின் இடிஇ ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பம் வாயிலாக செல்போன் கேமராவை கொண்டே முகத்தை ஸ்கேன் செய்து கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும். ஸ்கேன் செய்யும்போது பச்சை வண்ணம் காண்பித்தால் நெகட்டிவ் என்றும், சிவப்பு வண்ணம் காட்டினால் பாசிட்டிவ் உள்ளதாகவும் கொள்ளப்படுகிறது. அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், கடைகள் மற்றும் பொது வெளிகளில் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் முகத்தை ஸ்கேன் செய்யும் முறை அமலுக்கு வந்துள்ளது.

ரோபோ போலீஸ்

நாள் முழுவதும் பணிபுரிய தற்போது போலீஸ் வேலையிலும் ‘ரோபோ’ ஈடுபட்டுள்ளது. உலகில் முதன் முறையாக துபாயில் ரோபோ போலீஸ் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த ரோபோ துபாய் போலீஸ் சீருடை அணிந்துள்ளது. அது போலீஸ் அதிகாரிகளுடன் கைகுலுக்குகிறது. ராணுவ வீரர்கள் போன்று கம்பீரமாக சல்யூட் அடிக்கிறது. தெருக்களில் போலீசார் போன்று ரோந்து பணியும் செல்கிறது.

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டையர்கள் பிறப்பது அரிதல்ல

நம்மில் பெரும்பாலோனோர் நினைத்து கொண்டிருப்பது போல இரட்டையர்களாக பிறப்பது அரிதான ஒன்று அல்ல. மாறாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக இரட்டையர்கள் குறித்து 1915 முதல் ஆவணப்படுத்தப்பட்ட  ஆவணங்களின் மூலம், 1980 வரையிலான கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளில் 50 பேருக்கு ஒருவர் சாரி இருவர் இரட்டையர்களாக பிறக்கின்றனர்.  அதாவது கிட்டத்தட்ட 2 சதவீதம் பேர் இரட்டை குழந்தைகளாக பிறக்கின்றனர். 95க்கு பிறகு அதன் பிறப்பு விகிதம் 2.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2001 இல் 3 சதவீதம், 2010 இல் 3.3 சதவீதம் அதாவது பிறக்கும் 30 குழந்தைகளில் இருவர் இரட்டையர்கள் என்பதே அந்த ஆய்வு தெரிவிக்கும் சுவாரசிய தகவல்.

குரல் தேடல்

இணையதளத்தில் தகவலை தேட வேண்டுமென்றால் குரல்வழி மூலம் கூகுள் தேடுபொறியில் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை கூகுள் சேர்த்துள்ளது.

ஒருவர் மட்டும் வாக்களிப்பதற்காக வாக்கு சாவடி எங்கு அமைக்கப்பட்டது

குஜராத் மாநிலம் கிர் காட்டில் வசித்து வருபவர் மகந்த பரத்தாஸ் தர்சன்தாஸ். இவர் ஒட்டு போட்டதாலேயே நாடு முழுவதும் கவனம் பெற்றார். அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. கிர் காட்டில் இவர் வசிக்கும் பகுதியில் இவர் மட்டுமே தனித்து வசித்து வருகிறார். இவர் வாக்களிப்பதற்காக கடந்த 2004 ஆம் ஆண்டு இவர் வசிக்கும் பகுதியில் ஒரே ஒரு ஓட்டுக்காக மட்டும் வாக்கு சாவடி அமைக்கப்பட்டது. அதன் மூலம் இவர் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். தற்போது 2019 வரை இவர் ஒருவருக்காக மட்டுமே ஆளரவமற்ற கிர் வனப்பகுதியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்படடது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்