முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தவிர்க்க வேண்டியவை

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.

அடையாளம் காண

கத்திரிக்காயில் ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும். அதனால் சிறு ஓட்டை கூட இல்லாமல் கவனமாக வாங்கவேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். குச்சி போன்று இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். வெள்ளை வரிகள் இருந்தால் காய் கசக்கும்.

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை

பிறந்த குழந்தைகள் 75 சதவீதம் நீராலானவை என்றால் நம்ப முடிகிறதா.. ஆனால் அதுதான் உண்மை... குழந்தைகள் பிறந்ததும் பெரும்பாலும் அவை நீராகவே இருக்கின்றன. அவர்களது உடலில் 75 சதவீதம் நீரே இருப்பதாக நாசாவின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மனிதன் வளர வளர தனது நீர்ச்சத்தை இழப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்த மனிதர்கள் 55 முதல் 60 சசதவீதம் வரையில் நீரை இழக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன அற்புதம் பாருங்கள் உடல் நீராலானது என்றால் ஆச்சரியம் தானே.

வாட்ஸ்அப் இல் புதிய அப்டேட்

உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்திசெய்யும் விதமாக புது புது வசதிகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அனுப்பிய தகவலை டெலிட் செய்யும் வசதிக்கு, கூடுதல் நேரம் வழங்கிட திட்டமிட்டுள்ளது. தற்போது, வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய தகவலை 1 மணி நேரம் 8 நிமிடங்களுக்கு பிறகு டெலிட் செய்திட முடியாது. ஆனால், புதிய அப்டேட்டில் 2 நாள் 12 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யும் வகையிலான வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட உரையாடலிலும், குழு உரையாடலிலும் அனுப்பிய தகவல்களை அழித்திட கூடுதல் நேரம் கிடைக்கிறது. வெளியான செய்தியின்படி, இந்த புதிய அப்டேட் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.410 இல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கும் 'கார்டு'

ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷின் வரப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கோயிலுக்குள் நுழைந்து விட்டது ஸ்வைப் மிஷின். திருச்சி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியிலும் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளதாம்.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதட்டு தைலங்களை சேகரித்து சிறுமி கின்னஸ் சாதனை

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த Scarlett Ashley Cheng என்ற 6 வயது சிறுமி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்றால் நம்புவதற்கு சிறிது கடினம் தான். ஆனால் அதுதான் உண்மை. அவரும், அவரது சகோதரியான 8 வயது Kaylyn என்ற சிறுமியும் இணைந்து 3 388 உதட்டு தைலங்களை சேகரித்து வைத்துள்ளனர். தற்போது இது கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. லிப்ஸ்டிக்கை போலவே லிப் பாம் என அழைக்கப்படும் உதட்டு தைலம் நவீன பேஷனில் ஒரு அங்கமாக உள்ளது. உதடுகளில் விதவிதமாக பூசிக் கொள்ளும் 100 கணக்கான பிராண்டுகள் சந்தைகளில் குவிந்து கிடக்கின்றன. தங்களது பாட்டியிடமிருந்து இது குறித்து தெரிந்து கொண்ட குழந்தைகள் படிப்படியாக இதை சேகரிக்க தொடங்கி இன்று உலக சாதனையாக மாறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்