முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஜாக்கிரதை... வேண்டாம்

உருளைக்கிழங்கு, ரொட்டி மற்றும் சிப்ஸ் போன்ற உணவு வகைகளை பொன்நிறத்தில் வறுத்து சாப்பிடுவதால் உடல் நலத்துக்கு தீங்கு இல்லை என்றும், அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுக்கப்படும் உணவு பொருட்களில் ‘அக்ரிலேமிட்’ எனப்படும் ரசாயன பொருளின் அளவு அதிகரித்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாம்.

பிளாஸ்டிக்கை விட காகித பைகள் பாதுகாப்பானவையா?

உலகையே அழிக்க வந்த நாசகார அரக்கன் பிளாஸ்டிக் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆகவே பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.அதே வேளையில் பிளாஸ்டிக் மாற்றாக காகித பைகள் சூழலை பாதிப்பதில்லை என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் இது நம்பிக்கை இல்லை மூட நம்பிக்கை என விளாசுகிறார்கள் விஞ்ஞானிகள். பிளாஸ்டிக் பைகளை போலவே காகித பைகளும் சுற்று சூழலுக்கு அச்சுறுத்தலானவை. காகித தயாரிப்பின் போது 75 சதவீத சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. காகித தயாரிப்பின் போது 80 சதவீதத்துக்கும் அதிகமான பசுமையை பாதிக்கும் வாயுக்கள் வெளியாவதாகவும், நீர் மாசுபாடு ஏற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏராளமான எரிசக்தி ஆற்றலையும் இவை செலவிடுகின்றன. ஆகவே எது சிறப்பு என்றால் நம்மூர் மஞ்சப்பை அல்லது சணல்பை. இனி சாக்கு பையை கேவலமாக பார்க்காதீர்கள் மக்களே..

பி.எம்.டபுள்யூ ஸ்கூட்டர்

பி.எம்.டபுள்யூ சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிட உள்ளது. இத்தாலியில் நடைப்பெற்ற கண்காட்சி ஒன்றில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் உருவாக்கவுள்ள மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. நகர பயன்பாட்டை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் தயாரிக்கப்பட உள்ளது. இதில் செராமிக் எல்.இ.டி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதனுடைய இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சமும், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. டிஸ்பிளேவில் வேகம், போகும் பாதை, ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் வகையில் உள்ளது.

செவ்வாயில் குடியேறலாம்....

அமெரிக்காவில், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, ஓரியண் விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா ஆய்வு மையம் கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யவும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளுக்காக கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளநிலையில், மற்றொரு ரோவர் விண்கலத்தினை 2020 வாக்கில் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் வரும் 2033ம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை நாசா நிச்சயம் அனுப்பும் என நம்பப்படுகிறது.

சசாங்காசனம்

சசாங்காசனம் செய்து வந்தால் முதுகு, வயிற்றுப் பகுதியில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் பாயும். இதனால், இடுப்பு மற்றும் முதுகின் அடிப்புறம் உள்ள நரம்புகள் உரம் பெறும். உடல் முழுவதும் தளர்வாக இருப்பதை நம்மால் உணர முடியும். முதுகின் நரம்புகள் வலுப்பெறுவதால் முதுகு பகுதியில் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.

வாட்டர் ப்ரூப் ஸ்பீக்கர்

வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரான லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த முடியும். மேலும் 360 டிகிரி சரவுண்ட்டுக்கு ஒலியை கொடுக்கும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரத்திற்கு கேட்கலாம். 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், எந்தவித சேதமும் ஏற்படாதாம். ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்ய முடியும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்