தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மதசடங்கால் வந்தவினை

தாய்லாந்து நாட்டில் ஸ்ரீரச்சா பகுதியில் உள்ள ஒரு பூங்காவின் ஏரியில் வசிக்கும் 25-வயதான பெண் ஆமை ’ஒம்சின்’, மற்றவற்றைப் போல எளிதில் நீந்த முடியாமல் கஷ்டப்பட்டது. பின் இதனை சோதனை செய்து பார்த்ததில் இதன் வயிற்றில் அதிக அளவிலான நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. அறுவைசிகிச்சை மூலம் ஆமையின் வயிற்றில் இருந்த சுமார் 5 கிலோ அளவு நாணயங்கள் எடுக்கப்பட்டன. இதன் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மொத்த நாணயங்களின் எண்ணிக்கை மட்டும் 915. இந்த அளவு கணத்தை வயிற்றில் சுமந்துகொண்டுதான் அந்த ஆமை வாழ்ந்து வந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுடைய மத சடங்கிற்காக விட்டெறிந்த நாணயங்களை இந்த ஆமை முழுங்கியதுதான் இதற்கு காரணம்.

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் சாதனை

1984 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி வீரர் Uwe Hohn என்பவர் தான் அதிகபட்ச தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அவர் எறிந்த தூரம் எவ்வளவு தெரியுமா 104.80 மீட்டர். அதற்கு முந்தைய சாதனை அமெரிக்காவைச் சேர்ந்த டாம் பெட்ரானோவ் ஈட்டி எறிந்த தூரம் 99.72. ஈட்டி எறிதலில் இதுவரை Uwe Hohn சாதனைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை.

நாளைய உலகம்

இந்த நான்கு கால் ரோபோ நாய்களை போன்றே இருக்கும். இந்த நான்கு கால் ரோபோ நிலநடுக்கத்தின் பொது மீட்பு பணி உதவிகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.இந்த ரோபோக்கள் இயற்கை பேரழிவுகளுக்கு குறிப்பாக பின்வரும் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது அழகாக இருந்தாலும் இந்த ரோபோக்கள் ஒரு நாள் மனித உயிர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.

வேப்பிலையின் நன்மை

மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை மரம் வேப்ப மரம். வேப்ப மரத்தின் இலையை 4,000 வருடங்களாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.  வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். வேப்ப மரத்தின் வேர்களில் நிறைய மருத்துவ பொருள் நிறைந்துள்ளது. இதன் வேரை பொடி செய்து பேன், பொடுகுத் தொல்லை போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி, இது சொரியாசிஸ், பருக்கள், சொறி சிரங்கு, படை மற்றும் பல தோல் நோய்களை தடுக்கும்.

ஷாம்பூவை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடு

இன்று உலகம் முழுவதும் நவீன பேஷன் விரும்பிகளை ஆட்டி படைத்துவரும் பொருள்களில் முதன்மையானது தலை கேசத்துக்கு பயன்படும் ஷாம்பூ. இது முதன்முதலில் எந்த நாட்டில் பயன்படுத்தப்பட்டது தெரியுமா.. இந்தியாவில்தான். பண்டைய இந்தியாவில் மக்கள் நெல்லிக்காய், பூந்திகொட்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை பயன்படுத்தி தங்களது கேசத்தை பராமரித்து வந்தனர்.  இந்த வகை பயன்பாடு இன்றும் இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுதான் பின்னர் வணிக ரீதியாக வெளநாடுகளுக்கு சென்று ஷாம்பூவாக மீண்டும் இந்தியாவுக்குள் வந்துள்ளது. ஷாம்பூ என்ற வார்த்தையே இந்திய வார்த்தையான சாம்போ என்பதில் இருந்து தோன்றியதாகும் என்றால் ஆச்சரியம் தானே..

சிரிப்பால் அளந்தவர்

சார்லி சாப்ளின், ஒரே வருடத்தில் 12 ஹாலிவுட் படங்கள் நடித்து சாதனை புரிந்தவர், நடிப்பு மட்டுமின்றி, இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன் முகம் கொண்டவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 days ago