முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சிக்னலிலேயே வாழ்நாளை கழிக்கும் மனிதன்

நகரத்தில் வாகனம் ஓட்டுவது நரகத்தை விட கொடுமையானது. அதிலும் போக்குவரத்து சிக்னலுக்காக நிற்கும்போது ஏற்படும் அழுத்தம் சொல்லி மாளாது. புதிய ஆய்வு ஒன்றில் ஒவ்வொரு மனிதரும் தனது  வாழ்நாளில் சராசரியாக 6 மாதங்களை சிக்னலில் காத்திருக்கும் போது செலவிடுவதாக தெரியவந்துள்ளது. பயண நேரத்தில் 20 சதவீதம், அதாவது 75 விநாடிகளை சிவப்பு சிக்னலில் செலவாகிறது.

கன்ன சுருக்கங்களை வைத்து பொய் சொல்வதை கண்டு பிடிக்கும் கருவி

போலீஸாரின் விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையை கூறவில்லை என்றால் லை டிடெக்டர் என்ற கருவி மூலம் மருத்துவ ரீதியாக உண்மையை வரவழைக்க முயற்சிப்பர். பெரும்பாலான நாடுகளில் இந்த முறைக்கு அனுமதி கிடையாது. இது அந்த நபரின் அனுமதியின்றி மருந்தின் மூலம் மேற்கொள்ளப்படுவதால் பலத்த எதிர்ப்புகள் உள்ளன. தற்போது இதற்கு முடிவு கட்டும் வகையில் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலை கழக பேராசிரியர் டினோ லெவி என்பவர் புதிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார். இது பொய் சொல்பவரின் கன்னங்களில் ஏற்படும் சுருக்கம் மற்றும் அதிர்வுகளை கணக்கிட்டு, அவர் பொய் சொல்கிறார் என்பதை காட்டிக் கொடுத்து விடும். இந்த தசை சுருக்கங்களை முன்பு எந்த சென்சராலும் கண்டறிய முடியவில்லை, ஆனால்,ஒரு இஸ்ரேல் நிறுவனத்துக்கு தனது புதுமையான எக்ஸ்ரோடு கருவியை விற்ற பேரா.யேல் ஹனைன் என்பவரின் கருவி இதை மிகச் சரியாக கணித்துள்ளது. சுமார் 75 சதவீத வெற்றியை இது அளித்துள்ளதாக அந்த குழுவினர் கூறுகின்றனர். இதற்காக முகத்தில் ஒட்டப்படும் சிறிய ஸ்டிக்கர்களில் இருக்கும் எக்ஸ்ரோடுகள் இவற்றை கணித்து சொல்லிவிடும் திறன் படைத்தவையாக உள்ளன. இனி வழக்கு விசாரணைகளில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என நம்பலாம்.

பெண்களின் திறமை

ஒருவரின் கண்களை பார்த்து அவரது மனநிலையை அறிந்து கொள்ளும் மனரீதியான திறமை பெண்களிடம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு மாறுபாடு காரணமாக பெண்களுக்கு இத்தகைய திறமை உள்ளதாம். இதுகுறித்த ஆய்வில் பங்கேற்ற 89 ஆயிரம் பேரிடம் மனிதனின் கண்களை பார்த்து மனநிலையை அறியும் திறமை இருப்பது தெரிய வந்தது. மேலும், இந்த திறமை ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் உள்ளது.

மவுன்டெயின் க்ளைம்பர்

மவுன்டெயின் க்ளைம்பர் பயிற்சி மூலம், இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் உள்ள சதை குறையும். முழு உடலும் வலுப் பெற உதவும். முதுகுவலியைக் குறைக்கும். உடலின் சமநிலைத்தன்மை அதிகரிக்கும். ஹை நீ  பயிற்சி மூலம் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வியர்வையை உண்டாக்கும். கைகால்களின் சீரான இயக்கத்துக்கு உதவும்.

எங்கும் 'கார்டு'

ரேஷன் கடைகளில் ஸ்வைப் மிஷின் வரப்போவதாக சொல்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே கோயிலுக்குள் நுழைந்து விட்டது ஸ்வைப் மிஷின். திருச்சி மாவட்டம் திருவரங்கம் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த ஸ்வைப் மிஷின் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியிலும் இந்த மிஷின் வைக்கப்பட்டுள்ளதாம்.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 days ago