முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

'மொய் டெக்'

செல்போன் செயலியின் மூலமாக மொய் செய்பவரின் விவரங்களை எழுதிக்கொள்ள புது செயலியை உருவாக்கியுள்ளனர் உசிலம்பட்டிப் பெண்கள்.  'மொய் டெக்' எனும் இந்த செயலி வியக்க வைத்துள்ளது. மேலும் விழாக்களுக்கு வந்து மொய் எழுதும் மக்களுக்கு அவர்கள் மொய் செய்தமைக்கான ரசீது மற்றும் அவர்களது அலைப்பேசிக்கு குறுந்தகவல் என அசத்துகின்றனர்.

ஆனந்த கண்ணீர்

பிரபலமான எமோஜி எது என்று கண்டுபிடிக்க, உலகம் முழுவதும் உள்ள 212 நாடுகளைச் சேர்ந்த 40 லட்சம் ஸ்மார்ட்போன்களில் உள்ள 427 மில்லியன் குறுஞ்செய்திகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், ஆனந்த கண்ணீருடன் இருக்கும் முகம் போன்ற எமோஜி உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய பாப்புலரான எமோஜியாகத் தேர்வு செய்யப்பட்டது.

நாசா திட்டம்

பூமியின் வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் குறைந்த அளவில் கார் பன்டை ஆக்சைடு உள்ளிட்டவைகள் உள்ளன. ஆனால் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு உள்ளது. எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ‘நாசா’ திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது. 2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்பும் போது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்கள் செல்போனில் வைரஸ் இருக்கிறதா? என்பதை கண்டுபிடித்துவிடலாம். உங்கள் அனுமதி இல்லாமல் செயலிகள் அல்லது வேறு ஏதேனும் ப்ரீமியம் பயன்பாடுக்காக உங்கள் அக்கவுண்டில் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அல்லது, உங்களின் அனுமதி இல்லாமலேயே ப்ரீமியம் மெசேஜ் அல்லது அழைப்புகள் செல்லும். அதிகப்படியான விளம்பரங்கள் உங்கள் செல்போனில் தோன்றிக்கொண்டிருந்தால், விளம்பரம் தொடர்பான ட்ரோஜன் அல்லது வைரஸ் உங்கள் செல்போனுக்குள் நுழைந்திருக்கலாம். உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அப்போது, உங்களின் தொடர்பில் உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் முன்புபோல் இருக்காது. அடிக்கடி ஹேங்க் ஆகும் அல்லது மிகவும் ஸ்லோவான ஸ்பீடில் புரோகிராம்கள் இயங்கும். புதிய செயலிகள் உங்கள் அனுமதியில்லாமல் பதிவிறக்கமாகியிருக்கும். அப்படி இருந்தால் உடனடியாக உஷாராகிக்கொள்ளுங்கள். விரைவாக டேட்டா தீர்ந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கலாம். ஏனென்றால், அவையே டேட்டாக்களை அதிகம் யூஸ் செய்யும். பேட்டரி திடீரென குறையும், போன் சூடாகவும். இவையெல்லாம், உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ்கள் இருப்பதற்கான அறிகுறி.

பிக் பெண்ட்

துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா உலகின் உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. தற்போது, சுமார் 1,220 மீட்டர் உயரத்திலான கட்டிடம் ஒன்றை நியூயார்க்கில் வடிவமைக்க உள்ளனர். இதன் உயரத்தை விட மிக பெரிய சாதனை என்னவென்றால், இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு பிக் பெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago