முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி

மிகவும் அரிய வகை இளம் சிவப்பு நிற வெட்டுக்கிளி அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல் ஆய்வாளரான டிர்க் பார்க்கர் என்ற 33 வயது இளைஞர் இதை கண்டுள்ளார். அவருக்கு தொடக்கத்தில் இது எத்தனை அரியது என்பது தெரிந்திருக்கவில்லை. பின்னர் பூச்சி இனங்கள் தொடர்பாக கூகுளில் தேடிய போதுதான் இது அரிய வகை என்பது தெரியவந்தது என்கிறார். மரபணுவில் ஏற்படும் எரித்ரிசைம் என்பதன் காரணமாக இந்த நிற மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது அதை தனது வீட்டில் செல்லப்பிராணியாக வைத்திருக்கிறார் பார்க்கர்.

ஆய்வாளர்களின் விருப்பம்

ஹரியானாவில் உள்ள ராக்கிகர்ஹி ஓவுறு தொல்பொருள் ஆய்வாளர்களின் கனவாகும். இதை 1963-ம் ஆண்டு சிந்து சமவெளியில் மிக பெரிய நகரம் என கண்டுபிடித்தனர். மொஹெஞ்சோடரோ மற்றும் ஹாரப்பாவில் உள்ள தளங்களைவிட இது பெரிது என்று கூறப்படுகிறது. தற்போது அதில் இருந்த பொக்கிஷங்கள் களவாடப்பட்டுள்ளன.

இப்படியும் சிலர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரூ.6000 கோடி மதிப்புடைய ஹரேகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷ்யாம் தோலாக்கியாவின் மகன் ஒருவர் ஒரு மாதம் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார். செகந்திராபாத்தில் 100 ரூபாய் வாடகை அறையில் தங்கிய அவர் காலணி கடைகளில் பணியாற்றியும், ரிக்ஷா தொழிலாளிகளுடன் தங்கியும் இந்த வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

தமிழனின் துரதிஷ்டம்

14 வயதிலேயே மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கி பிரமிக்க வைத்தவர் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை. இவருக்கு ஆகஸ்ட் 30,1982-ல் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சலை கண்டுப்பிடித்தவர் என காப்புரிமை அளித்தும் மாடர்ன் வரலாற்றில் இவர் பெயர் இடம் பெறாமல் போனது வேதனைக்குரியது.

மாவிலையின் மகிம்மை

மாவிலைத் தோரணத்தை வீட்டு வாசலில் கட்டுவதால், அவை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் நமக்கு கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் சக்தி மாவிலைக்கு உண்டு. மேலும் வீட்டு வாசலும் பச்சை பசேல் என மங்களகரமாக இருக்கும்.

சே குவேராவுக்கு நேரு

உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 20 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 22 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 22 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 20 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 20 hours ago