முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தகவல் பரிமாற்றத்துக்கு தந்தி என்ற கருவி இருந்தது தெரியுமா?

இன்றைக்கு தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தொலைபேசி, அலைபேசி, இமெயில், எஸ்எம்எஸ், என்று படிப்படியாக வானளாவிய அளவில் வளர்ந்து விட்டது. ஆம் உண்மையிலேயே வானத்துக்கு சென்று விட்டது. செயற்கை கோள்கள் மூலம் தகவல் பரிமாற்ற காலத்தை அடைந்துள்ளோம். ஆனால் தொடக்கத்தில் டெலிகிராஃப் எனப்படும் தந்தி என்ற முறையில் செய்திகளை அனுப்பினோம். இதை அமெரிக்காவில் உள்ள ஓவியர் சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837 இல் கண்டுபிடித்தார். எனவே தந்திக்கு மோர்ஸ் தந்தி என்ற பெயர் வந்தது.  அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது.  பொதுமக்களுக்கான முதல் தந்தி சேவையை பிரிட்டன் 1846 இல் நிறுவியது. இந்தியாவில் 1850 இல் சோதனை முறையில் கொல்கத்தாவுக்கும் டயமண்ட் துறைமுகத்துக்கும் இடையே நிறுவப்பட்டது. இதன் பின்னர் 1851 இல் கிழக்கிந்திய கம்பெனி இதை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. 1902 இல் முதன்முறையாக கம்பியில்லா தந்தி முறை அறிமுகமானது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இந்தியாவில் தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது. 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் குறைந்துவிட்டது. இதையடுத்து 2013 ஜூலை 15 முதல் இந்தியாவில் தந்தி சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

ஐஸ் வாட்டர்

நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் ஜில் தண்ணீரையே பருகுகின்றனர். இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜில் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் செரிமானம் ஆவதில் பிரச்சனை மற்றும் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

உணவில் கவனம்

காரமான உணவுகள், இரைப்பையில் அமில சுரப்பை அதிகரித்து உடலை பரபரப்புடன் இருக்க செய்வதால் கோபத்தை ஏற்படுத்தும். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது, காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுதல், பிஸ்கட், சிப்ஸ், சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள், ஆல்கஹால் ஆகியவை கோபத்தை ஏற்படுத்தும்.

நவீன சோப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கற்ற நவீன சோப் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். சோயா பீன்ஸ், தேங்காய் போன்றவற்றின் கொழுப்பு அமிலங்கள், மக்காச்சோளத்தில் இருந்து பெறப்படும் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது. இந்த சோப்பின் ஓ.எப்.எஸ். எனப்படும் மூலக்கூறுகளால் குறைந்த அளவிலான சோப்பை பயன்படுத்தி அதிகமான கறைகளை அகற்றலாம்.

நாளைய உலகம்

இந்த நான்கு கால் ரோபோ நாய்களை போன்றே இருக்கும். இந்த நான்கு கால் ரோபோ நிலநடுக்கத்தின் பொது மீட்பு பணி உதவிகளுக்கு பயன்படுத்த உள்ளனர்.இந்த ரோபோக்கள் இயற்கை பேரழிவுகளுக்கு குறிப்பாக பின்வரும் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இது அழகாக இருந்தாலும் இந்த ரோபோக்கள் ஒரு நாள் மனித உயிர்களை காப்பாற்றும் என நம்பப்படுகிறது.

புதிய யுக்தி

சிறுவர்களுக்கு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் போது, ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு முன் குழந்தைகளை இயல்பான மனநிலையில் இருக்கச் செய்ய அமெரிக்காவில் உள்ள சான் டியாகோ மருத்துவமனை சிறாரே ரிமோட் கண்ட்ரோல் காரில் செல்லும் வகையிலான புதிய வசதியை உருவாக்கி உள்ளனர். இதனால் சிறார் மற்றும் பெற்றோருடைய பதற்றம் தணிகிறதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்