முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பறக்கும் பைக்

ஹோவர் பைக் எனப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிளை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஸ்கோர்பியன் 3 ஹோவர் பைக் என்று பெயரிடப்பட்டுள்ள இது, மின்சாரம் மூலம் இயங்குகிறது. ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக் கூடிய ஹோவர் பைக்கானது தரையில் இருந்து 33 அடி உயரத்தில் மணிக்கு 30 மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும்.

விமான சேவை : ஒரு ஸ்மால் ஹிஸ்ட்ரி

உலகின் முதல் விமான நிறுவனமான கேஎல்எம் நிறுவனம் 1919 இல் தொடங்கப்பட்டது. 2 ஆவது நிறுவனம் காண்டாஸ் 1920 இல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோ ஏர்போர்ட்டில் ஒவ்வொரு 37 நொடிக்கும் ஒரு விமானம் வந்து செல்கிறது. ஏ380 ரக விமானத்தின் நீளத்தை விட அதன் இறக்கைகள் நீளமானவை. விமானத்தின் நீளம் 72.7 மீ, இறக்கைகளின் நீளம் 80 மீ. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகளின் உணவுக்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 700 மில்லியன் டாலர் செலவிடுகிறது. மதுபானத்துக்காக 16 பில்லியன் டாலர் செலவிடுகிறது. முதன்முதலாக இணையம் மற்றும் ஆன்லைன் பதிவுகளை மேற்கொண்ட விமான நிறுவனம் அலாஸ்கா ஏர்லைன்ஸ், ஆண்டு 1999. ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் அமெரிக்காவில் மட்டும் 61 ஆயிரம் பேர் விமானப் பயணம் செய்கின்றனர்.

குட்டி திகில் கதை, Little horror story

மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் எழுதிய மிக சிறிய திகில் கதை   "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."

நவீன டிஜிட்டல் செல்பி ஸ்டிக் அறிமுகம்

இன்றைக்கு செல்போனில் படம் பிடிக்க அனைவரும் செல்பி ஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். ஆனால் செல்பி ஸ்டிக்கே படம் எடுக்க பயன்பட்டால்...  இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அடுத்த கட்டமாக 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்கக் கூடிய செல்பி ஸ்டிக்குகள் அறிமுகம் ஆகியுள்ளன. Vecnos IQUI என அறியப்படும் இந்த ஸ்டிக்குகளில் 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விரும்பிய திசையிலும், 360 டிகிரி கோணத்திலும் படம் பிடிக்க முடியும். இதற்கென சிறப்பு செயலி மற்றும் மென்பொருள்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இனி படமெடுக்க செல்போனோ, கேமராவையோ தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை. இந்த செல்பி ஸ்டிக் போதும்..

பூமியின் பரிணாம வளர்ச்சியில் பறவைகள் எப்படி தோன்றின தெரியுமா?

பொதுவாக மீன்கள் போன்ற நீர் வாழ் விலங்குகளிலிருந்து பறவைகள் தோன்றியிருக்கலாம் நம்பப்படுகிறது. ஆனால் உண்மையில் பறவைகள் பரிணாம வளர்ச்சியில் டினோசர்களிடமிருந்தே தோன்றியதாம். இவை இரண்டும் ஊர்வன இனங்களிலிருந்து தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக பறவையானது முதலையிலிருந்தே தோன்றியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதே போல திமிங்கலம், டால்பின் ஆகியவற்றுக்கு ஒரு காலத்தில் பின்னங்கால்கள் இருந்தனவாம். அதன் அடையாளமாக அவற்றின் உடலில் ஒரு சிறிய எலும்பு உள்ளது. இதுதான் அவற்றுக்கு பின்புற துடுப்பாக மாற்றமடைந்திருக்கலாம் என்கின்றனர். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்.

வந்திருச்சு புதுசு

எவர்லாஸ்ட் நோட்புக் மூலம் எழுதுவதை டிஜிட்டலாக சேமிக்க வசதி வந்தாச்சு. இந்த நோட்புக்கில், எழுதலாம், பதிவு செய்து வைக்கலாம். கூடுதலாக, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவற்றிலும் பகிரலாம். க்ளவுட் முறையில் கூகுள் ட்ரைவ் உள்ளிட்டவற்றில் கோப்புகளை சேமிக்கவும் வசதியுண்டு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago