முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதினாவின் சக்தி

புதினாவை துவையலாக செய்து சாப்பிட்டால் வயிற்றுக்கோளாறுகள் அகலும், கடுமையான வயிற்றிப் போக்கினை நிறுத்தும். இதில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட் சத்துக்கள் உள்ளன.

எட்டே மாதத்தில் ...

பஞ்சாபை சேர்ந்த ரீனா - சூரஜ் குமார் தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு வயது எட்டு மாதம். ஆனால் பத்து வயது குழந்தை சாப்பிடும் உணவை இந்தக் குழந்தை சாப்பிடுவதுதான் ஆச்சரியம். இதனால் இந்த குழந்தையின் எடை தற்போது 17 கிலோவாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, மூச்சு விடுவதற்கும் தூங்குவதற்கும் சிரமம் ஏற்பட்டதால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் மழை பெய்யும் இடம் எது தெரியுமா?

நமக்கெல்லாம் ஆண்டில் சில மாதங்கள், வாரங்கள் மழை பெய்தாலே ஐயோ அப்பா என அலறத் தொடங்கி விடுகிறோம். ஆண்டு முழுவதும் மழை பெய்தால்.. அவ்வளவுதான்.. ஆனால் ஒரு காலத்தில் மாதம் மும்மாரி அதாவது மூன்று முறை மழை பெய்த காலங்கள் எல்லாம் இருந்தன. அதெல்லாம் ஓர் கார் காலம். சரி விஷயத்துக்கு வருவோம்... ஹவாய் தீவில் உள்ள Kauai என்ற இடத்தில் Waialeale மலைப்பிரதேசத்தில் ஆண்டு முழுவதும் மழை பெய்கிறது. அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 350 நாட்களும் மழை பெய்கிறதாம். அம்மாடியோவ்... நினைத்தாலே குளிரக்கிறது அல்லவா.

ஒரு கிலோ டீத்தூள் ரூ.99999 கேட்டால் அசந்து போவீங்க

இந்தியாவில் அதுவும் அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் டீத்தூள்தான் தற்போது சுமார் ரூ.1 லட்சத்துக்கு அதாவது ரூ.99999 க்கு விற்பனையாகியுள்ளது. அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் அமைந்துள்ள மனோகரி டீ எஸ்டேட்டில் விளையும் மனோகரி கோல்ட் டீத்தூள்தான் தற்போது ஏலத்தில் கிலோவுக்கு ரூ.99999 க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. அதற்கு முன்னதாக அதிக பட்ச விலையாக கோல்டன் பட்டர்ஃபிளை டீத்தூள்தான் ரூ.75 ஆயிரத்துகு விற்று சாதனை படைத்தது. தற்போது அதை மனோகரி டீத்தூள் முறியடித்துள்ளது.

தெரு நாய்களின் சொர்க்கம் எனப்படும் கிராமம்

கோஸ்டா ரிக்கா நாட்டில் உள்ள சான்டா பார்பரா என்ற மலையில் அமைந்துள்ளது Territorio de Zaguates என்ற மலைக்கிராமம். இதன் பொருள் தெரு நாய்களின் சொர்க்கம் என்பதாகும். இங்கு ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் எதற்கு வருகின்றனர் தெரியுமா.. இங்குள்ள சான்டா பார்பரா மலையை பார்ப்பதை காட்டிலும் இந்த கிராமத்தை பார்க்கத்தான் வருகிறார்கள். இதில் அப்படி என்ன விசேசம் என்கிறீர்களா.. நாய்களின் சரணாலயம், நாய்களின் புகலிடம், நாய்களின் சொர்க்கம் எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம். அத்தனை வகையான நாய்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.இங்கு மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பராமரிக்கப்படுகின்றன. கலப்பின நாய்கள், நாட்டு நாய்கள், உயர் ரக நாய்கள் என பல்வேறு வகையான நாய் இனங்கள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. ஒரு தனியார் தன்னார்வ நிறுவனத்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமம் நாய்களுக்காக நிர்வகிக்கப்படுகிறது.இங்கு நாய்ளுக்கு தேவையான அனைத்து உணவு, மருந்து, நீச்சல் போன்ற பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான நாய்கள் அந்த மலை கிராமத்தில் சுதந்திரமாக சுற்றி திரியும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. சில அரிய வகை நாய் இனங்களும் இங்குள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

எலிகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு

இந்தியாவில் 90 வகை எலிகளும் தமிழகத்தில் 15 வகை எலிகளும் உள்ளன. எனினும் வரப்பெலி எனப்படும் கறம்பை எலி, வெள்ளெலி, புல் எலி மற்றும் சுண்டெலி ஆகியவை பயிர்களை அழிக்கும் முக்கிய இனங்கள். ஆண்டுக்கு 70 முதல் 80 லட்சம் டன் உணவுப் பொருட்களை சேதப்படுத்துவதன் மூலம் ரூ.800 கோடி அளவிற்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.  ஒரு மனிதனுக்குத் தேவையான ஒரு நாள் உணவு தானியத்தை மூன்று ஜோடி எலிகள் ஒரு நாளில் தின்று அழிக்கும் திறனுடையவை. வயல் எலிகள் ஒவ்வொன்றும் தங்கள் வளைகளில் உள்ள உணவு அறைகளில் 3 முதல் 5 கிலோ நெல்மணிகள், ஒரு கிலோ உளுந்து மற்றும் பாசிப்பயறு ஆகியவற்றை சேமித்து வைப்பது கண்டறியப்பட்டுள்ளது.  ஒரு ஜோடி எலிகள் ஆண்டுக்கு 2 முதல் 5 தடவையாக ஒவ்வொரு முறையும் 6 – 8 குட்டிகள் ஈனுகின்றன. பிறந்த 45 நாளில் இவையும் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். இவற்றின் சராசரி வயது 2 ஆண்டுகள். இதனால் ஒரு ஜோடி எலிகள் ஒரே ஆண்டில் 500 எலிகளாக பெருகுகின்றன. செப்டம்பர், அக்டோபர், ஜனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. நுட்பமான அறிவும், தந்திரமும், புத்திசாலித்தனமும் நிறைந்த இவற்றுக்கு வாசனை, ருசி, கேட்டல் மற்றும் தொடுதல் திறன் அதிகம். வயல் எலிகள் நீரில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக நீந்தும். 20 முதல் 25 மீட்டர் நீளமும், ஒன்றிற்கு மேற்பட்ட புறவழிகளும் கொண்ட வளைகளைத் தோண்டுகின்றன. உணவின்றி 7 நாட்களும், நீரின்றி 2 நாட்களும் சமாளிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்