தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை கலெக்டர்களுக்கு பசுமை விருது: மாசு கட்டுப்பாடு அலுவலர்களின் பயன்பாட்டுக்கு 25 மின்வாகனங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சனிக்கிழமை, 4 ஜூன் 2022      தமிழகம்
CM-3 2022 06 04

Source: provided

சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் முதல்வர் வழங்கினார். 

மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும். மக்கள் சார்ந்திருக்கும் நீர், காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குரிய தாக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  

மின் வாகனங்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப் புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்று மாசினை குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்க ஏதுவாகவும் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்காகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை முதல்வர் வழங்கினார்.

பசுமை விருதுகள்

மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட கலெக்டர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021-ம் ஆண்டுக்கான பசுமை விருதினை மதுரை மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம்  மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும்  திருவண்ணாமலை  மாவட்ட கலெக்டர் முருகேஷ் ஆகியோருக்கு முதல்வர் வழங்கி சிறப்பித்தார். 

பசுமை முதன்மையாளர் விருதுகள்

மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றி விருதுக்கு தேர்வான 79 பல்வேறு அமைப்புகளில், இராணிப்பேட்டை டேனரி எப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை - அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர் - சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி மாவட்டம் - கிளீன் குன்னூர் மற்றும் போரூர் - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றிற்கு 2021-ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், பரிசுத் தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்  மெய்யநாதன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் உதயன், வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 21 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 21 hours ago
View all comments

வாசகர் கருத்து