முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்

சனிக்கிழமை, 29 மார்ச் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

சென்னை : பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே அ.தி.மு.க .முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில் செங்கோட்டையன் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு எழுந்தன. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி பெயரையும் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அ.தி.மு.க. அலுவலகத்தை பார்ப்பதற்காக டெல்லிக்கு சென்றதாக கூறிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சி.வி. சண்முகம், கே.பி. முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் இருந்தனர். இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமையும் என்று பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க. - பா.ஜ.க. ஆகிய இரு தரப்பும் இதனை உறுதி செய்யாத நிலையில்,  செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார்.  அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 days ago
View all comments

வாசகர் கருத்து