முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் இருந்து பா.ம.க. வெளிநடப்பு

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
PMK 2024-06-26

Source: provided

சென்னை : சட்டசபையில் இருந்து பா.ம.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று நடந்தது இறுதிக்கூட்டம் என்பதால் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏ.க்களும் தாங்கள் கொடுத்திருந்த முக்கிய பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசினார்கள். அதில் பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு குறித்து சில தகவல்களை தெரிவித்தார்.

இது தொடர்பாக சில கருத்துகளையும் கூறினார். ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. தனது கருத்தை சபையில் பதிய வைக்க எழுந்து நீண்ட நேரம் வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், உங்களுக்கு தேவையான அளவுக்கு ஏற்கனவே வாய்ப்புகள் தந்துள்ளேன். நீங்கள் பேசியது பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார். இதை தொடர்ந்து ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து