முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்ததான மையங்களை கண்காணிக்க வலைதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      தமிழகம்
CM 2024-05-31

சென்னை, இரத்த தான மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது என்று ரத்ததான தின செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள தேசிய தன்னார்வ இரத்ததான நாள் செய்தியில்,

நவீன சுகாதார பாதுகாப்பு அமைப்பில், இரத்தம் தேவைப்படும் நபருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரத்தம் அளிப்பது மனித நேயமிக்க உயிர்காக்கும் செயலாகும். 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோராண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது. 

இவ்வாண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தின் கருப்பொருள் இரத்த நன்கொடையின் 20-ம் ஆண்டு கொண்டாட்டம். இரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள் என்பதாகும்.

தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஊர்வலங்கள். இரத்ததான முகாம்கள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை தமிழக அரசு செய்து வருகிறது. 

 எனவே, அடுத்தவர் உயிர்காக்கும் இரத்ததானத்தினைத் தவறாது செய்வோம். தமிழகத்தில்  இதற்கென 107 அரசு இரத்த மையங்களும், 247 தனியார் இரத்த மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. 

இத்தளத்தில் இரத்ததான முகாம் மற்றும் இரத்த கொடையாளர்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அதில் இரத்த வகைகளின் இருப்பைத் தெரிந்துக் கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தேவைப்படும் பெற்றுக் கொள்ளலாம். 

 ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், மொழிப் பாகுபாடின்றி வாழ்வளிக்க மனித நேயத்தோடு தன்னார்வ இரத்ததானம் செய்திட முன்வருபவர்களை உளமாற பாராட்டுகிறேன். மேலும், பொதுமக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து